ஐபிஎல் 2023 தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னமும் சில போட்டிகள் அணைத்து அணிகளுக்கும் மீதம் இருக்கும் நிலையில் பிளே ஆஃப் எந்த அணி செல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று 7.30 க்கு நடக்கும் சென்னை மைதானத்தில் நடக்கும் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி அடைந்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்குகிறது.

ஒரு காலத்தில் ஐபிஎல் போட்டிகளில் மிகவும் பலம் வாய்த்த அணியாக கருதப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்போது ஐபிஎல் 2023 தொடரில் இருந்து வெளியேறும் தருவாயில் உள்ளது. ஒரு அதிசயம் மட்டுமே பிளேஆஃப்களுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில் தான் இன்று மே 14ம் தேதி சென்னை மைதானத்தில் சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
இந்த போட்டியில் ஒருவேளை கொல்கத்தா தோல்வியடைந்தால். 80 சதவிகிதம் உறுதியாக ஐபிஎல் 2023 தொடரின் ப்ளே-ஆஃப்களில் இருந்து வெளியேறும். மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த போட்டி முக்கியமானது என்று சொல்லலாம். சென்னை இந்த போட்டியில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக பிளே ஆஃப் சென்று விடும்.
Ready. Steady. Go! 🚂💨 pic.twitter.com/L0vMn8EPMk
— KolkataKnightRiders (@KKRiders) May 14, 2023
அப்படிப்பட்ட சூழ்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஓன்று பகிரப்பட்டுள்ளது. அந்த பதிவில் சென்னை எக்ஸ்பிரஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், ஜேசன் ராய் ஆகியோருடன் வருண் சக்ரவர்த்தி மற்றும் ரிங்கு சிங் ஆகியோருக்கு பின்னால் வீரர்கள் தமிழ் நாட்டின் பாரம்பரிய உடையை அணிந்துள்ளனர்.

மேலும் இவர்களுக்கு பின்னே சென்னை எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்ட ரயிலில் செல்வது போல உள்ளது. அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சொல்லப்போனால் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டுள்ள அந்த பதிவு சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலான நிலையில் தான் ரசிகர்கள் பலரும் இந்த பதிவை விமர்சித்து வருகின்றனர். சிலர் “இந்த போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை மோசமாக தோற்றுவிட வேண்டாம் என்றும், சிலர் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.





