ஐபிஎல் 2023 தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. இதில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது லக்னோ அணி. இந்நிலையில் 177 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறக்குகிய கொல்கத்தா அணிக்கு வெற்றிபெற கடைசி ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால் கொல்கத்தா அணியில் அடித்து ஆடும் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்த நிலையில் தனி ஆளாக ஆட தொடங்கினார் ரிங்கு சிங். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய கொல்கத்தாவுக்கு கடைசி ஓவரில் வெற்றி 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அதிரடியாக ஆடிய ரிங்கு கடைசி 3 பந்துகளில் 16 ரன்கள் விளாசினார். இருந்த போதிலும் கொல்கத்தா 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
கொல்கத்தா அணி தோல்வியை தழுவினாலும் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டார் ரிங்கு சிங். அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு 478 ரங்களுடன் 4 அரை சத்தோடு 59 ரன்கள் சராசரியும். 149 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இருக்கிறார் ரிங்கு. மேலும் 28 சிக்ஸர்களை விளையாடியிருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தான் போட்டி முடிந்த பிறகு ரிங்கு சிங் குறித்து கொல்கத்தா கேப்டன் ராணா பேசியுள்ளார்.

ராணா கூறியது :
அவர் கூறுகையில் முடிவு எங்களுக்கு சாதகமாக அமையவில்லை, ஆனால் இந்த சீசனில் நடந்ததை கருத்தில் வைத்து கண்டிப்பாக அடுத்த சீசனில் வலுவாக திரும்புவோம். உலகின் சிறந்த லீக்கில் போட்டியிட்டு முதல் 4 இடங்களுக்குள் வர, நீங்கள் மூன்று துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. ஏனென்றால் முதல் நான்கு இடங்களுக்கு தகுதிபெறும் திறன் எங்களிடம் இருந்தது. இருந்த போதிலும் தவறுகளைச் செய்து அடுத்த சீசனில் சிறப்பாக வருவோம் என்றார்.
ரிங்கு சிங் பற்றி பேசுகையில் 14 போட்டிகளாக நான் அவரைப் பற்றி பேசி விட்டேன். இது இனிமேல் அவரைப் பற்றி பேச என்னிடம் வார்த்தை இல்லை. தனிப்பட்ட முறையில் அவரது ஆட்டம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நிச்சயம் உலகம் அவரது ஆட்டத்தை பார்த்திருக்கும் கண்டிப்பாக இனி அவரை உலகமே வாழ்த்தும் என ரிங்கு சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.





