ஐபிஎல் 2023 தொடரில் 61 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதல் டாஸ் வென்ற சேனனி அணி பேட்டிங் செய்யும் தேர்வு செய்தது. தலில் களமிறங்கிய சென்னை அணியின் வீரர்கள் யாரும் பெரிதாக ஆடாத நிலையில் சிவா துபே மட்டும் தனி ஆளாக விளையாடி 34 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார். இருந்த போதிலும் சென்னை அணி இறுதியில் 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதற்க்கு பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் இருவரும் சிறப்பாக விளையாடினர். ரிங்கு 43 பந்துகளில் 54 ரங்களையும், கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா 44 பந்துகளில் 57 ரங்களையும் அடித்து கொல்கத்தா அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர். இந்நிலையில் இந்த வெற்றிக்கு முக்கியமான காரணமாக கருதப்படுபவர் வருண் சக்கரவர்த்தி.
ஏனென்றால் சென்னை அணியின் முக்கிய வீரர்களான ருதுராஜ் மற்றும் ரஹானேவை அற்புதமாக ஆட்டமிழக்க செய்து சென்னை அணியின் தொடக்கத்தை ஆட்டம் காண செய்தார். அதோடு இந்த ஐபிஎல் தொடரில் வருண் சக்கரவர்த்தி தன்னுடைய மர்மமான பந்துவீச்சாள் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் சென்னைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய வருண் சக்கரவர்த்தி குறித்து பிளெமிங் போட்டி முடிந்த பிறகு பேசினார்.

பிளெமிங் கொடுத்த பேட்டி :
சென்னை vs கொல்கத்தா போட்டி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிளெமிங் கூறியதாவது “வரும் சக்கரவர்த்தியை வாங்காமல் விட்டது இப்போதும் எங்களுக்கு வருத்தமளிக்கிறது. ஏனெனில் அவர் பல வருடங்களாக வலை பயிற்சியில் அபாரமாக பந்துவீசி எங்களுக்கு தொல்லை கொடுத்தார். ஆனால் ஐபிஎல் ஏலம் சென்ற வித்தினால் எங்களினால் அவரை சென்னை அணையில் தக்க வைக்க முடியவில்லை என்றார் பிளெமிங்.

மேலும் பேசிய அவர் மற்ற ஐபிஎல் அணிகளில் இருக்கும் தமிழ்நாடு வீரர்களுக்கு அவரைப் பற்றி நன்றாக தெரியும். அதனால் அவரை ரகசியமாக எங்களால் அணியில் வைத்திருக்க முடியவில்லை. வருண் சக்கரவர்த்தி வலை பயிற்சியில் பந்து வீசிய போதே அவருடைய திறமையால் ஈர்க்கப்பட்டோம். அதனால் இந்த வருடம் அவரை பெரிய தொகை கொடுத்து வாங்குவதற்கும் நாங்கள் விரும்பினோம். அவர் இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசினார் என்று பிளெமிங் தெரிவித்தார்.

வருண் சக்ரவர்த்தியை வாங்கியதில் இருந்து அவரை கொல்கத்தா அணி மர்மமான சுழற்பந்து வீச்சாளரைத் தக்க வைத்துக் கொண்டது. அவரை ஐபிஎல் ஏலத்திற்க்கே செல்ல விடவில்லை. இந்நிலையில் நேற்று நடந்த சென்னைக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடதக்கது.





