ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸின் தங்களுடைய இரண்டாவது போட்டியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் எதிர்கொண்டது. அந்த போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மைதானமான சேப்பாக்கத்தில் நேற்று இரவு 7.30மணி அளவில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பௌலிங்கை தேர்வு செய்தது. சென்னை அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை நன்றாகவே அமைந்தது.

சென்னை மைதானத்தில் முதல் முறையாக களம் கண்ட ருதுராஜ் அருமையான ஆட்டத்தின் மூலம் சென்னை ரசிகர்களுக்கு விருந்தளித்தார். அதன் பின் வந்த சென்னை அணியின் கேப்டன் தோனி வந்த முதல் பந்திலே சிக்ஸ்சரை தெறிக்க விட்டார். அவர் 3 பந்துகளில் 12 ரன்களை எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்களை இழந்து 217 ரன்களை குவித்தது
இந்நிலையில் இரண்டாவதாக களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தொடக்கத்தில் திணறினாலும் அதற்கு பிறகு சிறப்பான ஆட்டத்தை காட்டி நல்ல ரன்கள் குவித்தனர். கிட்டத்தட்ட வெற்றியடையும் அளவிற்கு வந்து விட்டனர். ஆனால் இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது. இந்நிலையில் தோனி அடித்த அந்த 3 சிக்ஸர்கள் சோசியல் மீடியாவில் அதிகமாக வைரல் ஆகியது.

தோனியை பற்றி ரஷித் லத்தீப் :
இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த மோதலுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் கீப்பருமான ரஷித் லத்தீப் தோனியைப் பாராட்டி ஒரு விஷியம் பேசியிருக்கிறார். நேர்காணலில் பேசிய ரஷித் லத்தீப் 41 வயது தோனியை பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் அவர் கூறுகையில் “ஐபிஎல்லில் மட்டும் 5000 ரன்களை எம்.எஸ்.தோனி அடித்துள்ளார். தோனியிடம் எப்போதும் ஒரு கோல்டன் டெம்ப்ளேட் உள்ளது.

தோனி அடித்த 2 சிக்சர்கள் :
அவரது வரலாறு தங்கத்தால் எழுதப்பட்டுள்ளது அது இந்தியாவுக்காகவும் , உலக கிரிக்கெட்டுக்காகவும் தான். நீங்களும் நானும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் அது எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவர் ஒரு சிறந்த இந்திய கேப்டன் மற்றும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்டர். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அவர் பேட்டிங் செய்யும் விதத்தைப் பாருங்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் எதிரான மேட்சில் வெறும் 2-3 பந்துகளை மட்டுமே எதிர் கொண்டு தான் யார் என்பதை காட்டினார்.
MS Dhoni's two consecutive sixes tonight.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 3, 2023
This man's aura is unmatchable! pic.twitter.com/RwADVJl6Pb
எம்.எஸ் தோனி மிகவும் பிரபலமானவர். நாம் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், விராட் கோலி கூட பார்த்திருக்கிறோம். ஆனால் தோனியும், அவர் களத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் விதமும், அவருக்கு இருக்கும் உணர்ச்சி போர்வமான ரசிகர்களின் கூட்டம், முற்றிலும் வித்தியாசமானது, சிறப்பானது என்று கூறினார் முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டன் லத்தீஃப் .




