ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 32ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தனர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் 43 பந்துகளில் 77 ரன்கள் அடித்து அசத்தினார். அதோடு அந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றார். அப்படி 21 வயதாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வியக்கத்தக்க வகையில் விளையாடிய நிலையில் அவருடைய கிரிக்கெட் பயணம் சுலபமாக இல்லை.

ஜெய்ஸ்வால் கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உதிரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பதோஹியில் பிறந்தார். இவரது தந்தை சிறிய ஹார்ட்வர் கடையை நடத்தி வருகிறார். இவருக்கு மொத்தம் 6 பிள்ளைகள். அவர்களின் 4வது மகன் தான் யஷிஸ்வி ஜெய்ஸ்வால். இவருக்கு சிறுவயதில் இருந்தே கிரிக்கெட்டின் மீது ஆர்வம் இருந்திருக்கிறது. தன்னுடைய பத்து வயதில் ஆசாத் மைதானத்தில் உள்ள கிரிக்கெட் பயிற்சி பெற்றுள்ளார்.
அதற்கு பிறகு கல்பாதேவி இடத்திற்கு குடிபெயர்ந்த அவர் பயிற்சி செய்ய தேவையான பணத்திற்காக ஒரு பால் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். வறுமை இருந்த போதிலும் கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார். அந்த கடியில் தங்கி வேலை பார்த்த நிலையில் கிரிக்கெட் பயிற்சி காரணமாக சரியாக வேலைக்கு ஜெய்ஸ்வாலினால் சரியாக செல்ல முடியவில்லை.

இதனால் அவரை கடையில் இருந்து நீக்கியுள்ளனர். இப்படியொரு நிலையில் என்னசெய்வது என்று ரோடுரோடாக சுற்றி திருந்த ஜெய்ஸ்வால் ஆசாத் மைதானத்தில் உள்ள பராமரிப்பு கூடத்தில் தங்கி பயிற்சி பெற்று வந்துள்ளார். பயிற்சி பெற்றபின் இருக்கும் நேரத்தில் பானிபூரி விற்க சென்றுள்ளார். இப்படியே சில வருடங்கள் கடந்த பின்னர் பல கிரிக்கெட் வீரர்களுக்கு ஒளிவிளக்காக இருந்த ஜ்வாலா சிங் ஜெய்ஸ்வாலின் திறமையை கண்டறிந்துள்ளார்.

ஜெய்ஸ்வால் கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த கிளாஸ் ஷீல்ட் போட்டியில் 319 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். அதற்கு பிறகு அதே பிபோட்டியில் 99 ரன்களை கொடுத்து 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஒரு ஆல்ரவுண்டராக இவர் செய்த சாதனையை லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டில் பதிவு செய்துள்ளார். ஜெய்ஸ்வால் பின்னர் 16வயதிற்கு உற்பட்ட மும்பை அணியில் இணைத்தார். தொடர்ந்து திறமையை காட்டி வந்த ஜெய்ஸ்வால் 2018- 2019 ரஞ்சி தொடரில் அறிமுகமாகினார்.

அதற்கு பபிறகு அண்டர் 19 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2.40 கோடிக்கு 2020ல் வாங்கியது. 20 மற்றும் 21ஆம் ஆண்டுகளில் ஜொலிக்காவிட்டாலும் தற்போது நடந்துவரும் ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இப்படி பானிபூரி விற்ற சிறுவன் கூட முயற்சி செய்தால் சாதிக்கலாம் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மத்தியில் ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார் ஜெய்ஸ்வால்.





