ஐபிஎல் தொடரில் நேற்று மே 24ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இடையே ஒரு சிறந்த எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது, இதில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோவை 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம், மும்பை இப்போது இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கு இன்னும் ஒரு ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்றாலே போதுமானது.

அப்படிப்பட்ட நிலையில் தான் நேற்றைய போட்டிக்குப் பிறகு ஒரு வீடியோ திலக் வர்மா குறித்த வீடியோ இன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திலக் வர்மா வளர்ந்துவரும் இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர். இவரை மும்பை அணி 1.70 கோடிக்கு வாங்கியிருந்தாலும் அதனை விட சிறப்பான விளையாட்டை காட்டி வருகிறார் திலக் வர்மா. மேலும் இந்த ஐபிஎல் தொடரில் 10 போட்டிகள் விளையாடி 153 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 300 ரன்களை விலகியுள்ளார்.
மேலும் சில போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக திலக் வர்மா இருந்துள்ளார். இப்ப்டியொரு நிலையில் தானம் நேற்றைய எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்திய மும்பை அணி, குவாலிபையர்-2ல் விளையாட அகமதாபாத்துக்கு புறப்பட்டது. இதற்கிடையில் மும்பை அணி சென்ற விமானத்தில் நடந்த ஒரு விஷியம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் விமானத்தில் இருந்த ஏர் ஹோஸ்டஸிடம் சூர்யகுமார் யாதவ் எலுமிச்சை பலத்தை கேட்டு வாங்கி அதனை இருக்கையில் உறங்கி கொண்டிருந்த திலக் வர்மாவின் வாயில் ஊற்றினார். இதனால் தூக்கத்தில் இருந்து எழுந்த திலக் வர்மா திடீரென என்ன நடந்து என்பதை போல முகங்களை துடைக்க அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகாவும் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தார் அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Chain se sona hai toh jaag jao 🍋🤣🥲#OneFamily #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL @surya_14kumar @TilakV9 MI TV pic.twitter.com/1SjiJtSSx7
— Mumbai Indians (@mipaltan) May 25, 2023
MI vs LSG போட்டி பற்றி :
நேற்று நடத்த போட்டியை பற்றி பேசுகையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பையின் சிறப்பான பேட்டிங் மற்றும் பந்துவீச்சால் மும்பை வலுவான வெற்றியைப் பதிவு செய்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 182 ரன்கள் குவித்தது. இதில் அனைத்து பேட்ஸ்மான்களும் திறமையை வெளிப்படுத்தினர்.
இந்தப் போட்டியில் கேமரூன் கிரீன் 41 ரன்கள் எடுத்த நிலையில், சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா 33 மற்றும் 26 ரன்கள் எடுத்தனர். அனால் மும்பை அணி பேட்டிங்கை விட பந்துவீச்சில் அசத்தியது. இந்தப் போட்டியில் ஆகாஷ் மத்வால் அபாரமாக பந்துவீசி 3.3 ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். மறுபுறம் பியூஷ் சாவ்லா ஒரு விக்கெட்டையும், கிறிஸ் ஜோர்டான் ஒரு விக்கெட்டையும் பெற்றனர்.





