நேற்று நடந்த லக்னோ vs பெங்களூரு போட்டியில் முதலில் டாஸ் வென்ற பந்து வீச முடிவு செய்தது. இந்த போட்டி ஆர்சிபி அணியின் சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இதனால் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான கோலி அதிரடியாக விளையாடி சிக்சர்களும் பவுண்டரிகளையும் பறக்கவிட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது.

அதனை தொடர்ந்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி முதலில் இருந்தே தடுமாறினார்கள். இதனால் இன்று ஆர்சிபி தான் வெற்றியடையும் என்றிருந்த நிலையில் 10 வது ஓவருக்கு பிறகு பெரிய அற்புதம் நடந்தது. லக்னோ அணியின் நட்சத்திர வீரரான நிக்கோலஸ் பூரான் 15 பந்துகளில் அரை சதம் விளாசினார். அதன் மூலம் தேவைபடும் ரன்களின் இருக்கும் பந்துகளை விட குறைவாக ஆனது. இது ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடைசி ஓவரில் 6 பந்துகளை வெறும் 6 ரன்கள் தான் தேவைபட்டது. ஆனால் லக்னோவிடம் தேவையான பந்துகள் இல்லை. ஆனால் பெங்களூரு அணி பௌலரும் பதர்ட்டத்தில் இருந்தார்கள். இந்நிலையில் கடைசி ஓவரை அக்சர் படேல் போட வந்தார். அவர் வீசிய இரண்டாவது பந்தில் மார்க்வுட் விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் 19.4 ஓவரின் போது ரன்கள் சமமானது. இந்நிலையில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்றிருக்கும் போது 5 வது பந்தில் விக்கெட் விழுந்தது.
RCB fans don't know who they are messing with
— Rampal bishnoi (@RK15964270) April 10, 2023
This man is Gautam Gambhir, even Pakistani were afraid to mess with gouti
This man is monster @GautamGambhir pic.twitter.com/e85QlB85Vw
அப்படிப்பட்ட நிலையில் கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்றிருந்த நிலையில் கடைசி பந்து நேரடியாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்தியிடம் சென்றது. ஆனால் தினேஷ் கார்த்திக் பர்ட்டத்தில் இருந்த்தினால் ரன் அவுட் செய்யும் வாய்ப்பை தவறிவிட்டார். இந்நிலையில் லக்னோ அணி பெங்களூரு அணியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி தங்களுடைய 3 வது வெற்றியை பதிவு செய்த்தது.

இந்நிலையில் இப்படி ஒரு டிரில்லிங் லாஸ்ட் ஓவர் முடிவை பார்த்த கெளதம் கம்பிர் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். அதோடு பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்குள் வந்த கம்பீர் அங்குள்ள அர்சிபி ரசிகர்களை பார்த்து அமைதியாக இருக்கும் படி கைஜாடை செய்தார் அது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி ஆர்சிபி ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.




