ஐபிஎல் 2023 ல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த போட்டி நடைபெறுவதற்குள் பலவிதமான சிக்கல்கள் வந்தது. சொல்லப்போனால் 3 நாட்கள் நடந்த ஐபிஎல் போட்டி இதுதான். ஏனென்றால் கடந்த 28 போட்டி தொடங்கி மழை காரணமாக நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு 9 தேதி நடந்தது.

ஆனால் அப்போதும் முதல் இன்னிங் பிறகு மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. முதல் இன்னிங்கின் 20வது ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்களை குவித்தது. 215 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே மழை குறுக்கீட்டு போட்டி நிருத்தி வைக்கப்பட்டது. பின்னர் மழை நின்றபோதும் மைதானம் காரணமாக போட்டி 1 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது.
இதனால் 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் அணியின் கூட்டு முயற்சியால் சென்னை அணி இறுதி ஓவரில் அதிர்ச்சி கொடுத்து வெற்றி பெற்றது. இதற்கு காரணம் ஜடேஜா மற்றும் அணியின் கூட்டு முயற்சி தான். மேலும் வெற்றி பெற்றதும் சென்னை அணியின் கேப்டன் தோனி ஜடேஜாவை தூக்கி கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டார். அது ரசிகர்களுக்கு மனதை ஊருக்கும் காட்சியாக இருந்தது.

டேவின் கான்வே கூறியது :
இந்நிலையில் இந்த வெற்றிக்கு பிறகு பேசிய ஆட்டநாயகன் டேவின் காணவே “இந்த தருணத்திற்காக நான் நீண்ட காலம் காத்திருந்தேன். மிகவும் பதற்றமாகவே இருந்த போதிலும் ருத்துராஜும் நானும் இணைந்து இந்த இமாலய இலக்கை எப்படி அணுகுவது என்று திட்டம் தீட்டினோம். அதன்படி தொடக்கமே சிறப்பாக அமைந்தது. இறுதியில் வெற்றி பெற்றது என்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது.

தனிப்பட்ட முறையில் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு இது மறக்க முடியாத மிகச்சிறந்த வெற்றி இதுதான். இதைவிட பெரிய ஐபிஎல் பைனல் இருக்க முடியாது என்று நினைக்கிறேன். எனக்கு கிடைக்கும் பாராட்டுகள் முழுவதும் சென்னை அணியின் மைக் ஹஸ்ஸிக்கும் சேரும். இந்த சீசன் முழுவதும் என்னை வழிநடத்திய விதம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்தடுத்த சீசன்களில் என்னுடைய பங்களிப்பை கொடுப்பதற்கு ஆவலாக இருக்கிறேன் என்றார் டேவின் கான்வே.
இந்த வருட ஐபிஎல் சீசனை பொறுத்தவரையில் டேவின் கான்வே 16 போட்டிகளில் விளையாடி 51.69 என்ற சாராசரியுடன் 139.71 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 672 ரன்களை விளாசி இருக்கிறார் டேவின் கான்வே. மேலும் 6முறை அரை சதத்தையும் 77 போர்கள் மற்றும் 18 சிக்ஸர்களை விளாசி இருகிறார்.





