ஐபிஎல் 2023 தொடரின் 23வது லீக் ஆட்டம் தற்போது நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியஸின் குஜராத் டைட்டஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றனர். இந்நிலையில் டாஸை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. ஆனால் அவர்களின் முடிவு சரியானதா என்று தெரியவில்லை ஏனெற்ற்றால் பந்துவீச்சாளர்கள் ரன்களை வரி வழங்கினார்கள்.

ஆனால் அதற்கு தகுந்தாற் போல விக்கெட்டுகளும் விழுந்தது. குறிப்பாக ட்ரெண்ட் போல்ட் முதல் ஓவரிலேயே சாஹாவின் விக்கெட்டை எடுத்தார். அதற்கு பிறகு வது ஓவரில் சாம்பா சுப்மன் கில் விக்கெட்டை எடுத்தார். அந்த விக்கெட்டிற்கு பிறகு வந்த சப்மன் கில் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் அரை சதம் வரையில் சென்றாலும் அரைசதம் இல்லாமல் விக்கெட்டை பறிகொடுத்தார்கள். இந்நிலையில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தார்கள்.
இந்நிலையில் அடுத்த இன்னிங்கை அட களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு சரியான ஆட்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெற்றால் முதல் ஓவரில் இருந்து ராஜஸ்தான் அணிக்கு பிரச்சனை தொடங்கியது. இரண்டாவது ஓவரில் பந்துவீசிய ஹர்திக் பாண்டியா செய்சவால் விக்கெட்டை எடுத்தார். அதற்கு பிறகு 2.4 ஓவர்களில் ஷமி வீசிய பந்தில் ஸ்கூப் ஷாட் அடிக்க சென்று ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்கும் போது 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் விழுந்திருந்தது.

அதற்கு பிறகு வந்த சஞ்சு சாம்சன் பொறுமையாக இருந்து ரன்களை அடிக்க முயற்சி செய்தார். பின்னர் 12 ஓவரின் போது தொடர்ந்து 3 சிக்ஸர்களை அடித்தார் சஞ்சு சாம்சன். ஒருகட்டத்தில் சிறப்பாக விளையாடிய அவர் அரை சதம் விளாசினார் ஆனால் 14வது ஓவரின் கடைசி பந்தில் சாஞ்சுவின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார் நூர் அஹமட். அப்படி ஒவொவொரு பேட்ஸ்மேன்களாக ஆட்டமிழந்தாலும் ராஜஸ்தான் அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்களை பறக்க விட்டார்கள்.

இறுதியில் 2 ஓவர்களில் 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜூரில் ஆட்டமிழக்க உள்ளே வந்த அஸ்வின் ஒரு சிக்ஸர் மற்றும் 4 அடித்து ரன்களை குறைத்தார். ஆனால அவரும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார் இருந்தாலும் தன்னுடைய வேலையை சரியாக செய்து விட்டு சென்றார். பின்னர் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிரமாதமாக ஆடிய ஷிம்ரன் ஹெட்மயர் 19.2 பந்தில் சிக்ஸர் அடித்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.





