ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி ஞாயிறு அன்று பலம் வாய்ந்த சென்னை அணியை எதிர்கொள்ளும். இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இப்போட்டியானது மழையின் காரணமாக சற்று தாமதமாக தொடங்கியது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பெளலிங்கை தேர்வு செய்தார். அதுவே அவர்களுக்கு பாதகமாக அமைந்தது.

அதன் படி களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் அணிக்கு நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர். 3 ஓவர்கள் முடிந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி 20 ரன்களை மட்டுமே அடித்தனர். அதன் பின்னர் அதிரடியை காட்ட நினைத்த சாஹா 18 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த கில் 32 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். மும்பை அணியின் பௌலர்களை அடித்து விளாசி வந்தனர். 10 ஓவர்கள் முடிந்த நிலையில் 1 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்களை குவித்தனர்.
கில்லுடன் இணைந்த சாய் சுதர்ஷன் சில பவுண்டரிகளை பறக்க விட்டனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடி 49 பந்துகளிலே தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். மும்பை அணியின் பௌலர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வந்தனர். 16ஓவர்கள் முடிந்த நிலையில் 1 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை குவித்து வந்தனர். 129 ரன்கள் இருந்த நிலையில் விக்கெட் இழந்து வெளியேறினார் கில் 43 ரன்கள் ரன்களில் சாய் சுதர்ஷன் ரிடயர்ட் அவுட்டாகி வெளியேற, 20 வது ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 233 ரன்களை குவித்தனர்.

224 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே சோதனையாக வதேரா முதல் ஓவரில் அவுட்டாகி வெளியேறினர்.அதன் பின்னரே அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 8 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற மும்பை அணி திணறி வந்தது.அதிரடியாக விளையாடி வந்த திலக் வர்மா 14 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் இழந்து வெளியேறினார். அதன் பின் கிரீன் 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற சூர்யகுமார் யாதவ் அரை சதத்தை~ பூர்த்தி செய்தார்.

அதன் பின் சூர்யகுமார் யாதவ் 61 ரன்களில் வெளியேற சீட்டு கட்டுகள் போல் மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டகளை இழந்து குஜராத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது. விஷ்ணு வினோத் 5 ரன்களிலும், டிம் டேவிட் 2 ரன்னிலும் , ஜோர்டன் 2 ரன்னிலும் வெளியேறினார்கள்.இறுதியில் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே அடித்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. குஜராத் அணி இப்போட்டியை வென்றதன் மூலம் இறுதிப் போட்டியில் சென்னை அணியை மோதுள்ளன.





