இந்தியன் பிரீமியர் லீக்கில் 39 வது ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. மழையின் காரணமாக இந்த போட்டி தாமதமாகவே தொடங்கின. அதன் பிறகு டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பௌலிங்கை தேர்வு செய்தார். கொல்கத்தா அணிக்கு ஆரம்பம் அதிரடியாகவே ஆரம்பிக்க, இரண்டாவது ஓவரில் ஜெகதீசன் வெளியேறி மீண்டும் அணிக்கு ஏமாற்றத்தையே கொடுத்தார்.
— ॓ (@Swati_bomb) April 29, 2023
ஆனாலும் குர்பாஸ் அதிரடியாக விளையடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மற்றொரு புறம் வந்த வெங்கடேஷ் ஐயர் 11 ரன்களிலே வெளியேற, அணியின் கேப்டன் ராணாவும் 4 ரன்களில் வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தையே அளித்தார். குர்பாஸ்க்கு மற்றொரு பக்கம் யாரும் ஜோடி இணைந்து விளையாடிய தவறியதால், அதன் பின் கொல்கத்தா அணி தடுமாற்றைதை சந்தித்து வந்தது.இருப்பினும் அதிரடியாக விளையாடிய குர்பாஸ் 39 பந்துகளில் 81 ரன்களை குவித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
நிதானமாக விளையாடி வந்த ரிங்கு சிங் 19 ரன்களில் வெளியேறினார். அதன் பின் வந்த தனது அதிரடியான பாணியில் 19 பந்துகளில் 34 ரன்களை குவித்த நிலையில் அவுட்டாகினார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 179 ரன்களை குவித்தனர். இந்நிலையில் குஜராத் பயிற்சியாளர் நெஹரா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் ஒரு வீடியோ தற்போது ஷோசியல் மீடியாவில் வாரியாளாகி வருகிறது.

அந்த வீடியோவில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவை சந்தித்தார். அவர் முதலில் ஆஷிஷ் நெஹ்ராவின் தோள்களை அழுத்தி விட்டு அவரது கைகளை வைத்து வேடிக்கையான முறையில் களத்தில் உலாவி வந்தனர் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனும் அவருடன் காணப்பட்டார். அதோடு இன்று ஏப்ரல் 29 ஆஷிஷ் நெஹ்ராவுக்கு மிகவும் சிறப்பான நாள்.

ஏனெனில் இந்த நாளில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தனது 44வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஆஷிஷ் நெஹ்ரா விளையாடிய நாட்களில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். பல போட்டிகளில் இந்திய அணிக்காக முன்னணி பந்துவீச்சாளராக செயல்பட்டார். தற்போது கிரிக்கெட் பயிற்சி உலகில் நுழைந்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். முதல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் ஆஷிஷ் நெஹ்ரா என்பது குறிப்பிடதக்கது.





