டெல்லி கேப்பிடல்ஸ் அணி இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் விளையாண்டு வருகிறது. இந்த போட்டி டெல்லி அணியின் சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்பதினால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறது டெல்லி அணி. இருப்பினும், அதற்கு நேர்மாறாக குஜராத் பந்துவீச்சாளர்கள் டெல்லி கேபிடல்ஸில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். இந்த கடினமான நேரத்தின் மத்தியில், அக்ஷர் படேல் டெல்லியின் சிக்கல் தீர்க்கும் வீரரானார் டெல்லி கேபிடல்ஸின் அக்சர் படேல்

இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு முன்னால் திணறினர். எந்த பேட்ஸ்மேனும் அரைசதம் அடிக்க முடிய வில்லை அந்த அளவிற்கு குஜராத் சரியான பௌலிங் செய்தனர். அதே போல டெல்லி அணியின் தொடக்கமும் மிகவும் மோசமாக இருந்தது, பிரித்வி ஷா மற்றும் மார்ஷ் மோசமாக ஆட்டமிழந்தனர், அதே நேரத்தில் கேப்டன் வார்னர் 32 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.
ஒரு சமயத்தில் டெல்லி அணி 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், அக்சர் படேல் பேட்டிங்கிற்கு தலைமை தாங்கினார். தொடர்ந்து பந்துகளை தடுத்து டெல்லி அணிக்கு ரன்கள் எடுக்க உதவி செய்தார். அவர் 22 பந்துகளில் 36 ரன்களை விளாசினார். இதன் போது மூன்று சிக்ஸர்களையும் அடித்து அக்ஷர் படேல் டெல்லி அணியின் மானம் கப்பலேறாமல் காப்பாற்றினார்.
— INDIAN CRICKET (@FanOfIndianCric) April 4, 2023
இந்நிலையில் இந்த போட்டியின் போது கடைசி ஓவரில் குஜராத் வேகமாக ரன்களை எடுக்க வேண்டிய நிலையில், அக்சர் படேல் அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஒரு கையால் சிக்ஸருக்கு விளாசினார். இந்த சிக்ஸர் மிகவும் நன்றாக இருந்தது. சொல்லப்போனால் ஹர்திக் பாண்டியா கூட ஆச்சரியமாக பார்த்து வியந்தார். ஆனால், சில பந்துகளுக்குப் பிறகு முகமது ஷமி, டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்து அக்சர் பட்டேலை ஆட்டமிழந்தார்.





