உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 திருவிழா மார்ச் 22 முதல் நடைபெற்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய எட்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பல பரிட்சை செய்தது. இந்தப் போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி இண்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெறது. இதற்கு முன்பு ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியிடம் தோல்வியையும் அதே போல் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் அணியிடம் தோல்வியை சந்தித்து களமிறங்கியது.

இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி புள்ளி பட்டியலில் முதல் வெற்றியைப் பெற்று முன்னேறுவார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால் அதுவே அவருக்கு மிகவும் தவறான முடிவாக மாறியது. மும்பை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு ஆரம்பம் முதலே சோதனையாக முடிவு வரை இருந்தது. 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 277 ரன்களை குவித்தது.
இது ஐபிஎல் வரலாறு மிக அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்த இமாலய இலக்கை எதிர்க்க களமிறங்கிய மும்மை அணியின் பேட்ஸ்மேன்கள் திலக் வர்மா, டிம் டேவிட் போன்றவர்கள் கடுமையாக முயற்சி செய்து அவர்களால் 277 என்ற இமாலய இலக்கை எட்ட முடியாமல் 5 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியது பின்வருமாறு.

விக்கெட் நன்றாக இருந்தது, 277 ரன்களை நீங்கள் எடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு மோசமாக அல்லது நன்றாக பந்து வீசினாலும், எதிரணி அவ்வளவு ஸ்கோர் செய்ய வேண்டும் என்றால், அவர்கள் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். அவர்களின் பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்துவீசியதால் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. கிட்டத்தட்ட 500 ரன்கள் எடுத்தது மற்றும் விக்கெட் பேட்டர்களுக்கு உதவியது, நாங்கள் அங்கும் இங்கும் சில விஷயங்களைச் செய்திருக்கலாம். எங்களுடையது இளம் பந்துவீச்சு தாக்குதல் என்பதினால் கற்றுக்கொள்வோம்.

பந்து பலமுறை கூட்டத்திற்குள் சென்றால் ஓவர்களை முடிக்க உங்களுக்கு நேரம் தேவைப்படும். எல்லா பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் விஷயங்களைச் சரிசெய்வதற்கு சிறிது நேரம் ஆகும். க்வேனா மபாகா அருமையாக பேட்டிங் செய்து இருந்தார். அவரது முதல் போட்டியிலேயே அதிரடிக்காட்டினார். அவரது திறமையை ஆதரிக்க தக்கது.இன்னும் சிறிது விளையாட்டு நேரம் தேவை எங்களுடைய அணியை பல படுத்த என்றார் ஹர்திக் பாண்டியா.




