ஐபிஎல் 2023தொடரின் இன் 19வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவுக்கு எதிராக ஹாரி புரூக் அதிரடியாக பேட்டிங் செய்து சதம் அடித்தார். அவரது அதிரடியான பேட்டிங்கிற்கு ரசிகர்கள் வெறித்தனமாக அவரை பாராட்டி வருகின்றனர். ஹைத்ராபாத்திற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச முடிவு செய்தார்.

ஆனால் அவர் முடிவு செய்தது சரியான விஷியம் இல்லை என்று பின்னர் தான் தெரிந்தது. ஏனென்றால் தொடக்கம் முதலே ஹைதராபாத் அணியினரின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததது. கொல்கத்தாவின் பந்துவீச்சாளர்களை பறக்க விட்டனர் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்ஸ்கள். இந்நிலையில் கடந்த கடந்த மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த புரூக், ஐபிஎல்லில் விளையாடுவதற்குத் தகுதியானவர் என்பதை நிரூபித்துள்ளார்.
அவர் கொல்கத்தாவுக்கு எதிராக ஹைதராபாத் அணிக்காக ஹாரி புரூக் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதனை தொடந்து நீண்ட இன்னிங்ஸ் விளையாடி அணிக்கு பெரும் பங்களிப்பை செய்துள்ளார். பின்னர் தொடர்ந்து கொல்கத்தா அணி பந்துவீச்சளர்களை பார்க்கவிட்ட ப்ரூக் 55 பந்துகளில்100 ரன்கள் எடுத்த பிறகும் ஆட்டமிழக்காமல் 228 ரன்கள் கொண்டு வர உதவியாக இருந்தார். அதனை தொடர்ந்து இந்த இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா முயற்சி செய்தும் வெற்றியடையமுடியவில்லை.

இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசிய ஆட்டநாயகன் ஹாரி புரூக் பேசுகையில் “இது ஒரு சிறப்பான இரவு. அதிர்ஷ்டவசமாக நாங்களும் எங்களுடைய எல்லையை தாண்டிவிட்டோம். போட்டியின் இடையே கொஞ்சம் டென்ஷன் ஆனது. டி20யில் பேட்டிங் செய்வதுதான் பேட்டிங் செய்ய சிறந்த நேரம் என்று பலர் கூறுவார்கள். பேட் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஐந்தாவது இடத்தில் இருந்து அதிக வெற்றிகளை பெற்றுளேன். அது என்னுடைய அடையாளமாக மாறிவிட்டது. அந்த இடத்தில் இறங்கிதான் டெஸ்ட் போட்டியிலும் பல வெற்றிகளை பெற்றிருக்கிறேன்.

இன்று இரவு மைதானத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. நான் அதை ரசித்தேன். எனக்கு நானே பேட்டிங் சரியாக செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துக்கொண்டேன். நீங்கள் சோசியல் மீடியாவில் சென்று பார்க்கும் போது உங்களை ரசிகர்கள் குப்பை என்று கூறுகின்றனர். இன்று இரவு நான் சரியாக செயல்பட்டேன் என்று பல இந்தியர்கள் பாராட்டுகின்றனர். ஆனால், சில நாட்களுக்கு முன்பு என்னைத் திட்டினார்கள். இப்போது அவர்களுக்கு பதிலடி கொடுத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். அவர் பேசியது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது.
— Ninja (@IPLcskMSD) April 15, 2023





