ஐபிஎல் 2023 தொடரின் குவாலிபைர் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சென்னை அணி குஜராத்தை வீழ்த்தி பைனலுக்கு சென்றது. சொல்லப்போனால் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் ஜடேஜா தான், கடைசி நேரத்தில் பவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாசி வெற்றியை தேடிக்கொடுத்தார். ஆனால் கடந்த சீசனில் சென்னை அணிக்கு ஜடேஜா கேப்டனாக இருந்த நிலையில் மோசனான சில தோல்விகளை கடந்து மீண்டும் தோனி கேப்டனானர்.

இதன் போது ஜடேஜா அணியில் இருந்து விளக்கியிருந்தார். இதனால் அணியின் நிர்வாகத்திற்கும் தோனிக்கும் எதோ பிரச்னை என்று செய்திகள் பரவின. அதோடு ஜடேஜாவின் செயலும் அப்படிதான் இருந்த்து. இதனையடுத்து இந்த சீசனில் ஜடேஜா விளையாடும் போது தோனியை கணவதற்காக ஜடேஜா ஆட்டமிழக்க வேண்டும் என்ற பதாகைகளை ரசிகர்கள் ஏந்தி வந்தனர். இதற்கு ஜடேஜாவும் பேட்டியிலும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் சில பதிவுகள் மூலம் அதிர்ப்தி தெரிவித்திருந்தார்.
மேலும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னர் கூட டெல்லியுடன் விளையாடும் போது தோனிக்கு ஜடேஜாவிற்கு ஏதே பிரச்னை இருப்பதாக சில விடியோக்கள் வெளியாகின. அதோடு சென்னை அணியின் CEOவும் அந்த போட்டியின் போது ஜடேஜாவுடன் பேசினார். இதனால் ஏதே பிரச்னை சென்னை அணிக்கும் ஜடேஜாவிற்கும் இடையே இருக்கிறது என்று கூறிவந்த நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய CEO காசி விசுவநாதன் ஜடேஜா குறித்து பேசியுள்ளார்.

காசி விஸ்வநாதன் கூறியது :
அவர் கூறுகையில் “ஜடேஜா ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளர். பேட்டிங்கை பொறுத்தவரையில் ருதுராஜ், காணவே, ரஹானே, மொயின் அல போன்றவராளி தாண்டி தான் களமிறங்குவார். ஆனால் அவர் அப்படி வரும் போது அவருக்கு 5 முதல் 10 பந்துகள் மட்டுமே விளையாட கிடைக்கிறது. இந்த மாதிரியான சூழ்நிலைகளில் ஆட்டம் நல்ல முறையில் அமையும், சில முறை அது அப்படி இருக்காது. அதுமட்டுமல்லாமல் அவருக்கு பிறகு தோனி விளையாட களமிறங்குவார் என்பது தெரியும்.

மேலும் சில சமயங்களில் 2 அல்லது 3 பந்துகள் மட்டுமே விளையாட கிடைக்கும். அந்த மாதிரியான சூழ்நிலையில் ரசிகர்கள் தோனியின் மீது கொண்ட அன்பினால் தோனி களமிறங்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அது ஜடேஜாவுக்கு மனவருத்தத்தை கொடுத்திருக்கலாம். அது இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மட்டுமே தான் தெரிவித்தாரே தவிர எங்களிடம் இது சம்மந்தமாக எந்த புகாரையும் அவர் தெரிவிக்கவில்லை.

இதனையடுத்த டெல்லிக்கு எதிரான போட்டியின் போது தோனியும் ஜடேஜாவும் வாக்குவதத்தில் இருந்தது போன்று தெரிந்தது. அதுமட்டுமல்லாமல் காசி விஸ்வநாதன் அவர்களும் ஜடேஜாவிடம் சென்று சில வார்த்தைகளை பேசினார். இந்த விஷயம் குறித்து பதிலளித்த விசுவநாதன் “நான் ஜடேஜாவுடன் போட்டி முடிந்தவுடன் பேசியது குறித்து பலவிதமான விடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகின. ஆனால் உண்மையில் அது ஆட்டத்தின் ஒரு வழக்கமான விஷியங்களே தவிர தனிப்பட்ட எதுவும் இல்லை.
ஜடேஜா உண்மையில் தோனி மீது அதிக மரியாதை வைத்துள்ளார். அது இறுதிப்போட்டியில் கோப்பையை வென்ற போதும் கூட. அதனை ஜடேஜா தன்னுடைய ஆட்டநாயகன் விருதை தோனிக்கு அர்பணித்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். அந்த மாதிரியான மரியாதையை தான் ஜடேஜா தோனியின் மீது வைத்திருக்கிறார் என்றார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் CEO காசி விசுவநாதன்.





