சென்னை என்றாலே பல விஷியங்கள் நியாபகம் வரும் அவற்றில் முக்கியமான ஓன்று சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த பல வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் என்கிற பெயர் உலகம் முழுவதும் தெரிவதற்கு முக்கியமான காரணம் இந்திய கேப்டனாக இருந்த தோனி சென்னை அணிக்கு கேப்டனாக பொறுபேர்த்துதான். கிட்டத்தட்ட கந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னையின் கேப்டனாக நுழைந்து இன்று வரையில் சென்னை கேப்டனாக இருந்து சாதனை படைத்தது இருக்கிறார்.

அதுமட்டுமல்லாம் சென்னை சூப்பர் கிங்ஸ் இவரது தலைமையில் 4 கோப்பபைகளை வென்றுள்ளது. இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக குப்பைகளை வாங்கிய அணி என்ற சாதனையையும் பெற்றுள்ளது. அதே போல தமிழ் நாட்டில் உள்ள ரசிகர்களும் சென்னை அணி வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் ஆதரவாக இருந்து வருகின்றனர். ஆனால் சமீப காலமாக சென்னை அணியில் தமிழ் நாட்டு வீரர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
ஐபிஎல் என்பது பல நாட்டின் வீரர்கள் கலந்து கொண்டு ஆடினாலும் உள்நாட்டு வீரர்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இருந்த போதிலும் சென்னை அணியில் தமிழ் நாட்டின் வீரர்களின் பங்களிப்பு மிகவும் குறைவு என்றே சொல்லலாம். சொல்லப்போனால் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் சென்னை தவிர்ந்து பல அணிகளில் தமிழ்நாட்டின் வீரக்கல் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அனால் சென்னையில் ஒரு தமிழர் கூட இல்லை என்பது ரசிகர்களின் வருத்தமான இருக்கிறது.

ராமதாஸ் கூறியது :
இந்நிலையில் கஞ்சுபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூரில் பாமக 2.0 என்ற விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றி பேசினார். அவர் கூறுகையில் “நானும் சென்னை அணியின் ஆதரவாளர் தான். தோனியை எனக்கு மிகவும் பிடிக்கும். தோனிக்கு விசில் போடு. என்று சொல்லும் அளவிற்கு பிடிக்கும்.
" எனக்கு தோனி மிகவும் பிடிக்கும், ஆனால் CSK வில் ஓரு தமிழன் கூட இல்லை என்பது வருத்தமாக உள்ளது " அன்புமணி ராமதாஸ் #anbumani #AnbumaniRamadoss pic.twitter.com/MhwRcjYxGe
— Kishore Subha Ravi (@Kishoreamutha) May 2, 2023
ஆனால் 20 வீரர்கள் இருக்கும் அந்த அணியின் ஒரு தமிழர் கூட இல்லை. இங்குள்ள தமிழர்கள் பலரும் சென்னை அணிக்கு ஆதரவு தருகிறோம். ஆனால் ஒரு தமிழ் நாட்டை சேர்ந்த வீரர் கூட சென்னை அணியில் இல்லை. இலங்கை வீரர்கள் இரண்டு பேர் இருக்கின்றனர். உங்களால் ஒரு நல்ல வீரரை கூடவா தமிழ் நாட்டில் கண்டுபிடிக்க முடியவில்லை. பெயரிலேயே சென்னை என்று வைத்துக்கொண்டு ஒரு தமிழ் நாட்டு வீரர்கள் ஒருவர் கூட இல்லாதது மிகுந்த வருத்தம் என்று கூறினார் ராமதாஸ்.





