ஐபிஎல் 2023 சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் நடப்பு சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் 18 புள்ளிகள் எடுத்து முதல் அணியாக ஐபிஎல் 2023 பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதியாகியுள்ளார். மேலும் இதற்கு அடித்த படியாக சென்னை அணி கிட்டத்தட்ட பிளே ஆஃப் செல்லவும் இடத்தில் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் தான் 61வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதினா.

அனால் இந்த போட்டியில் சென்னை அணி தங்களுடைய சொந்த மைத்தானத்தில் தோல்வியை தழுவியது. இதனால் அடுத்ததாக டெல்லி அணியை எதிகொள்ளும் சென்னை வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற தருவாயில் இருக்கிறது. இந்நிலையில் CSK vs KKR போட்டி முடிந்த பிறகு சென்னை வீரர்கள் மற்றும் தோனி மைத்தனத்தில் உள்ள ரசிகர்களை சந்தித்து பரிசுகளை வழங்கி நன்றி கூறினார். ஏனென்றால் இது தோனியின் கட்சி சீசனாக இருக்கும் என்ற தகவலினால் ரசிகர்கள் தங்களுடைய ஹீரோ தோனிக்கு பிரயா விடை கொடுக்க முயற்சி செய்கின்றனர்.
ஆனால் குறிப்பிடதக்க வகையில் தோனி தான் ஓய்வு எடுக்க போவதாக இன்னமும் அறிவிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ஒரு முறை ஐபிஎல் வர்ணனையாளர் டேனியிடம் நீங்கள் தான் நான் ஓய்வு எடுக்க போவதாக கூறுகிறீர்கள் என்று தெரிவித்தார். இதனால் தோனி அடுத்த ஆண்டும் விளையாடுவார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு வந்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கெவின் பீட்டர்சன் தோனி ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

கேவின் பீட்டர்சன் கொடுத்த பேட்டி :
வர கூறுகையில் “இந்த சீசன் தோனிக்கு கடைசி ஐபிஎல் சீசனாக இருக்காது என்று எனக்கு தோன்றுகிறது. ஏனென்றால் கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு நானும் சென்னை மைதானத்தில் தான் இருந்தேன். போட்டி முடிந்த பிறகும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் யாருமே நகர்ந்து செல்லாமல் அப்படியே நின்றனர். ரசிகர்கள் அனைவரும் தோனிக்காக காத்திருந்து சென்னை வீரர்கள் மைதானத்தை வளம் வந்த போது அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆரவாரம் செய்து ஆதரவினை அளித்திருந்தனர்.

தோனிக்கு இப்படி ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும் போது அவர் இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற மாட்டார் என்று நினைக்கிறன். ஏனெனில் தற்போது புதிதாக வந்திருக்கும் இம்பேக்ட் வீரர் விதிமுறைப்படி தோனி நிச்சயம் அடுத்த ஆண்டும் விளையாடலாம். ஏனெனில் தோனியால் 20 ஓவர்கள் முxழுமையாக நின்று கீப்பிங் செய்ய முடியும். அதே வேளையில் பேட்டிங்கிலும் பின் வரிசையில் களமிறங்கி அதிரடி காட்ட முடியும்

மேலும் ஒரு கேப்டனாக அவர் எடுக்கும் முடிவுகளால் அணியை சிறப்பாக வழிநடத்துகிறது. மேலும் அவரது கீப்பிங் அபாரமாக உள்ளது. அவர் ஒரு பேட்டிங் எடுத்த உடனேயே வந்து ஆட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஏனென்றால் அவர் ஏழு, எட்டாவது வந்து இடத்தில் வந்து பந்துகளை எதிர்கொள்வார்.
அதுமட்டுமல்லாமல் இந்த சீசன் முடிந்து அவர் எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஓய்வெடுக்கும் வாய்ப்பைப் பெறுவார். எனவே அவரது முழங்காலை சரிசெய்து கொள்ளலாம். அதன் முலம் அடுத்த சீசனுக்கு தோனி தயாராக இருப்பர். தோனியை நான் கடைசியாகப் பார்க்கவில்லை என்று நம்புகிறேன். ஏனென்றால் தோனி இன்னமும் ஒரு சீசன் விளையாட வேண்டும் என்பது நாட்டில் உள்ள ரசிகர்களின் விருப்பம் என்றார் கெவின் பீட்டர்சன்.





