ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஆர்சிபி பதிவு செய்த்தது. அதோடு ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியும் தனது ஐபிஎல் வாழ்க்கையின் மற்றொரு சதத்தை அடித்தார். அதுவும் ஆர்சிபிக்கு மிக முக்கியமான போட்டியில் அடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கோலியின் இந்த இன்னிங்ஸ்ல் சிறப்பாக ஆடியதற்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. சொல்லப்போனால் விராட் கோலிக்கு இது 6வது ஐபிஎல் சதம். இந்த அற்புதமான இன்னிங்ஸுக்குப் பிறகு விராட் கோலியும் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். விராட் கோலி அபாரமாக ஆடி 100 ரன்கள் எடுத்து தனது அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு வந்து அவுட் ஆனார். இருந்தபோதிலும் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
விராட் கோலி கூறியது :
அப்போது பேசிய அவர் கூறுகையில் “இந்த போட்டியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு விளையாடிய சிறப்பான இன்னிங்ஸ் இது. இன்று பந்து பேட்டிற்கு சரியாக வந்துகொண்டிருந்தது. பேட்டிங் செய்ய தொடக்கிய போது ஒரு நல்ல தொடக்கத்தை விரும்பினோம். ஆனால் 172 இழப்பு இல்லாமல் வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை. கடந்த ஓரிரு போட்டிகள் எனக்கு மோசமாக இருந்ததால் வலைகளில் கூட என்னால் பந்தை சரியாக அடிக்க முடியவில்லை என்றார் விராட்.

மேலும் அவர் கூறுகையில் இந்த இன்னிங்ஸ் சரியான நேரத்தில் வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் எனது புள்ளிவிவரங்களைப் யோசிப்பதில்லை. நான் எப்போதும் மற்றவர்கள் என்னை பற்றி சொல்வதனை பற்றி எப்போதும் யோசிப்பதில்லை. இருப்பினும் நான் விளையாடிய விதம் பெருமையாக உள்ளது. நானும் டுபிளெசிஸும் டாட்டூவை விரும்புகிறோம். எங்களிடம் நல்ல புரிதல் உள்ளது, ஆட்டத்தை எப்படி முன்னோக்கி கொண்டு செல்வது என்பது எங்களுக்குத் தெரியும் என்றார் விராட்.
A magnificent CENTURY by Virat Kohli 🔥🔥
— IndianPremierLeague (@IPL) May 18, 2023
Take a bow, King Kohli!
His SIXTH century in the IPL.#TATAIPL #SRHvRCB pic.twitter.com/gd39A6tp5d
இந்த போட்டிக்கு முன் RCB அணி 12 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5 வது இடத்தில் இருந்தது. ஆனால் ஹைதராபாத் அணிக்கு எதிரான அபார வெற்றிக்குப் பிறகு அந்த அணி தற்போது 13 ஆட்டங்களில் 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தை எட்டியுள்ளது. இந்த வெற்றியின் பின்னர், RCB அணிக்கு பிளேஆஃப் செல்ல பொன்னான வாய்ப்பு உள்ளது, ஆனால் அந்த அணி தனது கடைசி போட்டியில் குஜராத் அணியை தோற்கடிக்க வேண்டும்.
அதே நேரத்தில் RCB புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தை அடைய முடியும். ஆனால் அதற்கு முதலில் சென்னை மற்றும் லக்னோ மற்றும் மும்பை அணிகள் கடைசி போட்டியில் தோற்று ஆர்சிபி குஜராத்தை வீழ்த்தினால் தான் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை அடைய முடியும் என்பது குறிப்பிடதக்கது.





