இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலுக்கு தற்போது மிகவும் மோசமான நேரமாக உள்ளது. கேஎல் ராகுல் கடந்த சில மாதங்களாக மோசமான பார்முடன் போராடி வருகிறார். குறிப்பிடதக்க ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டார். அதே நேரத்தில் அவரது மோசமான ஆட்டத்தினால் அவர் துணை கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

ஐபிஎல் 2023தொடரில் கூட அவர் அதிகம் விளையாடவில்லை. அதோடு இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஐபிஎல் 2023 மற்றும் WTC இறுதிப் போட்டிக்கான இந்திய டெஸ்ட் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னை பற்றி எழும் ட்ரோல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கேஎல் ராகுல்.
கேஎல் ராகுல் கூறியது :
அவர் கூறுகையில் “சமூக ஊடக என்னையும் மற்ற வீரர்களையும் செய்யும் ட்ரோலிங் எங்களை எதிர்மறையாக பாதிக்கிறது. எங்களுக்கு ஆதரவு தேவைப்படும்போது கருத்து தெரிவிக்கும் சக்தி அவர்களுக்கு இருப்பதால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். அப்படி சொல்வதற்கு முன்னர் முன்னால் இருப்பவர் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறார் என்பதையும் மக்கள் பார்க்க வேண்டும்.
மேலும் அவர் பேசுகையில் “நாங்கள் வேண்டுமென்றே மோசமான விளையாட்டை விளையாடவில்லை. அனைவரும் கடினமாக உழைக்கிறோம். ஆனால் சில நேரங்களில் கடின உழைப்பின் படி முடிவுகள் வராது. எந்த ஒரு வீரரும் மோசமாக செயல்பட விரும்பவில்லை. எனக்கு கிரிக்கெட் தவிர வேறு எதுவும் தெரியாது.
கிரிக்கெட்டில் சில முறை துரதிஷ்டம் ஏற்படுவதினால் அதனை வைத்துக்கொண்டு எனது விளையாட்டில் நான் தீவிரமாக இல்லை அல்லது நான் போதுமான அளவு கடினமாக உழைக்கவில்லை என்று எப்படி கருத முடியும். நான் கடினமாக உழைக்கிறேன் ஆனால் சில நேரங்களில் கடின உழைப்பின் படி முடிவுகள் எனக்கு சாதகமாக இருக்காது என்று தெரிவித்தார் கேஎல் ராகுல்.




