ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 63 போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள எக்னா கிரிக்கெட் மைதானத்தில் மோதின. இதில் முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 வது ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 177 ரன்களை குவித்தது. இந்நிலையில் 178 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது.

ஆனாலும் போட்டியின் இடையே விழுந்த விக்கெட்டுகளினால் தோல்வியை தழுவியது மும்பை. அப்படி லக்னோவின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தவர் மோஷின் கான். இவர் கடைசி ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து சிறப்பாக பந்துவீசினார். மோஷின் கான் கடந்த 2018ஆம் மும்பை அணிக்காக விளையாடி பின்னர் பந்துவீசாமல் இருந்த அவரை லக்னோ அணி போன வருடம் வாங்கியது.
கடந்த வருடம் பந்துவீசிய மோஷின் கான் 9 போட்டிகள் விளையாடு 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் அவருக்கு கைகளில் ரத்த கட்டிகள் ஏற்படுத்தினால் மருத்துவ சிகிச்சை செய்து கொண்டதால் தற்போது நடக்கும் சீசனில் பெரிதா பந்துவீசவில்லை. அப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த அவர் கூறுகையில் தனக்கு கையில் ஏற்பட்ட பிரச்னை குறித்தும். அதற்கு அறுவை சிகிச்சை நடந்த போதும். அது தன்னுடைய வழக்கை எப்படி மாற்றியது என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.
Done with the surgery! It was successful🙌🏼
— mohsin khan (@mohsin07khan) October 23, 2022
I would like to thank the Lucknow Super Giants , UPCA ,National Cricket Academy & the entire team of doctors & physios for the support.
I will get back on the field real soon 💪🏼 pic.twitter.com/j905TIRIj2
மோஷின் கான் கொடுத்த பேட்டி :
அவர் கூறியதாவது ” எனக்கு ஏற்பட்ட சில கடினமான சூழ்நிலையால் என்னால் மீண்டும் கிரிக்கெட் மேற்கொண்டு விளையாட முடியும் என்ற நம்பிக்கையை இழந்தேன். அதன் போது என்னுடைய கையை உயர்த்த முடியாத காரணத்தால் பந்து வீச்சை முற்றிலுமாக மறந்து விட்டேன். அந்த சமயத்தில் என்னுடைய கையை நேராக உயர்த்த முடியாமல் தவித்த போது பயிற்சியாளர்கள் உதவியும் எதுவும் செய்ய முடியவில்லை.
Coming back from an Injury, defended 11 runs against Tim David and Cameron Green.
— ♚ (@balltamperrer) May 16, 2023
MOSHIN KHAN🙇🏻♀️ pic.twitter.com/wJei5RIxWx
அதனால் மிகவும் பயந்து கொண்டே மருத்துவமனையை சென்றேன். அப்போது அவர்கள் கூறியதை கேட்டு பயமாக ஆகிவிட்டது. இன்னும் ஒரு மாதம் தாமதமாக வந்திருந்தால் உங்களது ஒரு கையை எடுத்திருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறினார்கள். அதனால் நான் சந்தித்த காயத்தை வேறு எந்த வீரர்களும் சந்திக்கக் கூடாது என்றே விரும்புகிறேன். ஏனென்றால் எனது தமனியும் நரம்புகளும் தடுத்தது.
நல்ல வேலையாக லக்னோ அணியின் கோனேகா சார், உத்தரபிரதேச வாரியத்தின் ராஜீவ் சுக்லா சார், மற்றும் எனது குடும்பத்தினர் தக்க சமயத்தில் அவர்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்தனர். இருப்பினும் அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் மிகவும் பயந்தேன். தற்போது குணமடைந்து வந்துள்ள எனக்கு ஆரம்ப கட்ட போட்டிகளில் சுமாராக செயல்பட்டும் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்த கம்பீர் உள்ளிட்ட பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறினார் கூறினார் மோஷின் கான்.





