ஐபிஎல் 2023 தொடரில் கடந்த 24ஆம் தேதி நடந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டியில் மூன்றாவது இடத்தில் இருந்த லக்னோ அணியை மும்பை எதிர்கொண்டது. இதில் சிறப்பாக பந்துவீசிய. இந்நிலையில் முதலில் பேட் செய்த மும்பை அணி மோசமாக ஆடினாலும் அணியின் கூட்டு முயற்சியினால் 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் குவித்து.

இந்நிலையில் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியால் மும்பை அணையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 101 மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால் மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று குவாலிபயர் 2க்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை அணி வெற்றிபெற முக்கியமான காரணமாக இருந்தவர் ஆகாஷ் மத்வா.
அந்த போட்டியில் ஆகாஷ் மத்வால் வீசிய 3.3 ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடக்க ஆட்டக்காரர் பிரேராக் மன்கட், ஆயுஷ் படோனி, நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய் மற்றும் மொஹ்சின் கான் ஆகியோரை வெளியேற்றினார். இதன் முலம் ரசிகர்கள் முதற்கொண்டு பல கிரிக்கெட் பிரபலங்களையும் தன்னுடைய அற்புதமான பந்துவீச்சினால் கவர்ந்தார் ஆகாஷ் மத்வால்.

இந்நிலையில் தான் சென்னை அணியின் முன்னாள் வீரர் சின்ன தல ரெய்னா ஆகாஷ் மத்வால் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் “அவருக்கு புதிய பந்தில் வாய்ப்பு கிடைத்தது சிறந்த விஷயம். மும்பை அணிகாக்க வான்கடே மைதானத்தில் அவர் ஆடியதை நம்பி ஆகாஷ் மத்வாலுக்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்தார்கள். அதனை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
அவரது ரன்-அப் சிறப்பாக உள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டிற்கு பிறகு இப்படிப்பட்ட ஒரு பந்துவீச்சாளரை பார்த்ததில்லை. அவர் இந்த ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகள் ஆடாமல் இருந்தாலும் மிகவும் சிறப்பாக பந்துவீசி அதுவும் குவாலிபயர் போட்டியில் இப்படிபட்ட ஒரு பந்துவீச்சை கொடுப்பது என்பது மிகவும் கடினமாக ஒரு விஷயம். ஆனால் அவர் மிகவும் சிறப்பான செயல்பட்டார் என்றார் சின்ன தல ரெய்னா.

இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் மும்பை அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு குஜராத்தை மும்பை வீழ்த்தியது என்றால் வரும் 28ஆம் தேதி சென்னை அணியை மும்பை எதிகொள்ளும். அது கண்டிப்பாக ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.




