நேற்று சென்னை vs குஜராத் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பெளலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே அணிக்கு நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர். அதிரடியாக ஆடிய ருதுராஜ் அதிரடியாக விளையாட நினைத்து 60 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் குஜராத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி 20 வது ஓவர்கள் முடிவில் 172 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.

173 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் சாஹா நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர். இருப்பினும் 12 ரன்களில் சாஹா அவுட்டாகி வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 8 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார். பின்னர் ஷனகா 17 ரன்களிலும், மில்லர் 7 ரன்களிலும், கில் 42 ரன்களில் வெளியேற போட்டி சென்னை அணியின் கைக்கு மாறியது
இருந்த போதிலும் ரஷீத் கான் மற்றும் விஜய் ஷங்கர் சென்னை அணிக்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள். ஆனால் அவர்களையும் வீழ்த்தி சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி இந்த வருட ஐபிஎல் குறித்தும். அணியில் வீரர்களின் அர்ப்பணிப்பு குறித்தும் தன்னுடைய கருத்துக்களை தெரிந்தார்.

தோனி கூறியது :
தோனி பேசுகையில் இது எங்களுடைய இன்னொரு ஐபிஎல் பைனல் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் கடந்த 2 மாதங்களின் உழைப்பு இது. அனைத்து வீரர்களும் இந்த வெற்றிக்கு பங்களித்தனர். உண்மையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு குறைவாகத்தான் கிடைத்தது. ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்த தோதெல்லாம் அதனை சரியாக பயன்படுத்தி கொண்டனர். குஜராத் எங்களுக்கு சரியான சேசிங் கொடுத்தனர்.
ஜடேஜாவிற்கு இந்த மைதானம் ஒத்துபோய் விட்டால் அவருடைய பந்தில் பெரிய ஷாட்டுகளை அடிப்பது என்பது மிகவும் கடினம். அவருடைய பந்துவீச்சுதான் போட்டியை மாற்றியது. அதே போல பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். வேகப்பந்து வீச்சாளர்களும் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள். அதன் முலம் குஜராத் அணியை வீழ்த்தி பைனலுக்கு சென்றது மகிழ்ச்சியாக் இருக்கிறது என்று கூறினார் தோனி.





