ஐபிஎல் 2023 ல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு அனைத்தும் சரியாக செல்ல 20வது ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்களை குவித்தது. 215 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே மழை குறுக்கீட்டு போட்டி நிருத்தி வைக்கப்பட்டது.

இதனால் 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் அணியின் கூட்டு முயற்சியால் சென்னை அணி இறுதி ஓவரில் அதிர்ச்சி கொடுத்து வெற்றி பெற்றது. இதற்கு காரணம் ஜடேஜா மற்றும் அணியின் கூட்டு முயற்சி தான். மேலும் வெற்றி பெற்றதும் சென்னை அணியின் கேப்டன் தோனி ஜடேஜாவை தூக்கி கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டார். அது ரசிகர்களுக்கு மனதை ஊருக்கும் காட்சியாக இருந்தது.
இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய ரவீந்திர ஜடேஜா கூறுகையில் “இது ஒரு அருமையான உணர்வாக இருக்கிறது. அதுவும் என்னுடைய சொந்த ஊரின் மக்களுக்கு இடையே இப்படி செயல்பட்டது ஒரு உணர்ச்சிப்பூர்வமான தருணம். ரசிகர்கள் மழை நிற்கும் வரையில் இரவு வரையில் காத்திருந்தார்கள். எங்களை ஆதரிக்க வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு கண்டிப்பாக நான் பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
We did it for ONE and ONLY “MS DHONI.🏆 mahi bhai aapke liye toh kuch bhi…❤️❤️ pic.twitter.com/iZnQUcZIYQ
— Ravindrasinh jadeja (@imjadeja) May 30, 2023
இந்த வெற்றியை நான் சென்னை அணியில் முக்கியமான ஒரு உறுப்பினரான தோனிக்கு சமர்ப்பிக்கிறேன். என்றார் மேலும் கடைசி 2 பந்துகளை பற்றி பேசிய அவர் “நான் பந்து எங்கு சென்றாலும் பரவாயில்லை என்று என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக அடிக்க முயற்சி செய்தேன். மோஹித் ஷர்மா வீசும் போது நான் பந்தை அடிக்க தயாராக இருந்தேன். எனக்கு தெரியும் அவர் பந்தை மெதுவாகத்தான் போடுவார் என்றார் ஜடேஜா.
ரவீந்திர ஜடேஜா கடந்த ஆண்டுகளில் செய்தது போல இந்த ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக அவர் செய்துள்ளது மிகவும் பெரியது. அவர் 190 ரன்களை 12 போட்டிகளில் 23.75 சராசரியுடன் 142.85 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அடித்துள்ளார். அவருடைய சிறந்த ஸ்கோர் 25. மேலும் 16 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை 21.55 சராசரியுடன் 7.56 பொருளாதார புள்ளியுடன் வீழ்த்தியுள்ளார் ஜடேஜா. பந்துவீச்சில் அவருடைய சிறந்த ஆட்டத்த்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.





