ஐபிஎல் 2023 க்கான குவலிப்பைர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் சென்னை அணி வெற்றி பெரும் சென்னை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடைந்தாலும்

இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பெளலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே அணிக்கு நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர். இந்நிலையில் இரண்டாவது ஓவரின் போது ருதுராஜ் கிடைத்த நோ பால் காரணமாக ருதுராஜ் தப்பினார். 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்களை அடித்து இருந்தனர். அதன் பிறகு அதிரடி ஆட்டத்தை தொடங்கினார்கள்.
36 பந்துகளில் பந்துகளிலே தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார் ருதுராஜ். அந்த நிலையில் அதிரடியாக விளையாட நினைத்து 60 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் அதன் பின் வந்த துபே 1 ரன் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். குஜராத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் திணறியே வந்தனர். சிறப்பான பந்து வீச்சின் மூலம் சென்னை அணியின் பேட்ஸ்மேன்களை திணற வைத்து வந்தனர்.

17 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட் இழந்து 137 ரன்களை மட்டுமே அடித்திருந்தனர். 17 ரன்கள் இருந்த நிலையில் ராயுடு அவுட்டாகி வெளியேற, சென்னை அணியின் கேப்டன் தோனி களமிறங்கினார். தோனி வந்த வேகத்திலேயே 1 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 20 வது ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்த நிலையில் 172 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.
இந்த ரன்கள் கண்டிப்பாக சென்னை அணிக்கும் போதாது என்று சொல்லலாம். ஏனென்றால் இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை ஒருமுறை கூட சென்னை அணியால் வெல்ல முடியவில்லை. இருந்த போதிலும் இந்த போட்டி சென்னை மைதானத்தில் நடப்படுத்தினால் சென்னைக்கு வாய்ப்பு இருக்கலாம். எப்படியிருந்தாலும் இன்னமும் இரன்டு மணி நேரத்தில் தெரிந்துவிடும்.





