ஐபிஎல் 2023 லீக் போட்டிக்கான 61 போட்டியை சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் எம்.எ. சிதம்பரம் மைதானத்தில் மோதின.இப்போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி இந்த சீசனில் முதல் அணியாக தகுதி பெரும். கொல்கத்தா அணிக்கு இந்த வருடம் சுமாரான வருடமாக இருந்து வந்தது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன் படி களமிறங்கிய சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் அணிக்கு நல்ல தொடக்கத்தையே கொடுக்க முயற்ச்சி செய்தனர்.அணியின் ஸ்கோரை உயர்த்த நினைத்து விளையாடி வந்த ருதுராஜ் 17 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தியிடம் விக்கெட்டைஇழந்து வெளியேற, அவர் பின்னரே ரஹானேவும் வருணின் சுழலில் சிக்கி 16 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
சென்னை அணிக்கு அடுத்தடுத்து சோதனையாக கான்வே அவரும் 30 ரன்களிலே வெளியேறினார். சென்னை அணியால் கொல்கத்தா அணியின் பௌலிங்கை சமளிக்க முடியாமல் திணறியே வந்தனர். சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர். சுனில் நரேன் வீசிய ஒரே ஓவரில் ராய்டு 4 ரன்களிலும், மொயின் அலி 1 ரன்னிலும் வெளியேற சென்னை அணி பின்னடைவை சந்தித்து வந்தது.

அதன் பின் டுபே மற்றும் ஜடேஜா இணைந்து நிதானமாக அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். ஜடேஜா 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் வந்த கேப்டன் தோனி 2 ரன்கள் மட்டுமே அடித்தார் இருப்பினும் சென்னை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 144 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்நிலையில் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு முதலிலேயே விக்கெட் விழுந்த நிலையில் வெங்கடேஷ் ஐயரும் 9(4) ரன்கள் எடுத்த நிலையில் சாஹரிடம் ஆட்டமிழந்தார். ஆனால் அதற்கு பிறகு களமிறங்கிய நிதிஸ் ராணா பொறுமையான ஆட தொடங்கினார். மறுபுறம் ஜேசன் ராய் 12(15) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் கேப்டன் ராணாவுடன் பொறுமையாக ஆடினாரர்.

சொல்லப்போனால் சென்னை அணி இவர்கள் இருவரையும் ஆட்டமிழக்க செய்ய அதிக கஷ்டப்பட்டது. இந்நிலையில் பொறுமையாக ஆடிய ரிங்கு சிங் 31 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். கேப்டன் நிதிஷ் ராணாவும் 38 ரன்களில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஆனால் சிறப்ப ஆடிவந்த ரிங்கு சிங் 18வது ஓவரில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் பொறுமையாக ஆடிய நிதிஷ் ராணா 18.3 ஓவர்களில் சென்னை அணியை வீழ்த்தினார்.





