ஐபிஎல் 2023 திருவிழா
அனைத்து இந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்த , ஐபிஎல் 2023 திருவிழா நேற்று இரவு அகமதாபத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.தொடக்க விழாவை சிறப்பிக்கும் வகையில் நடிகைகள் ரஷ்மிகா மந்தனா மற்றும் தமனா ஆகியோர் பங்கேற்று நடனம் ஆடியும் , பாடகர் அர்ஜித் சிங் பாடல்களை பாடியும் ஐபிஎல் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

வெற்றி விபரம் :
இதுவரையில் நடந்த ஆட்டத்தில் மேட்டுகுள் போட்டியில் சென்னை அணி குஜராத்தை அணியுடன் மோதியது. அதில் குஜராத்தை அணி வெற்றிபெற்றது. அதனையடுத்து மாலை 3.30 மணியளவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டம் நடந்தது.
இன்று நடக்கவிருக்கும் போட்டிகள் :
இந்நிலையில் ஐபிஎல் 3வது போட்டியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிகளும் மோத உள்ளன .இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நடைபெற போகின்றது . இதில் இரு அணிகளும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது .

டெல்லி கேப்பிடல்ஸ் அணி :
டெல்லி அணியின் முதுகெலும்பாக இருந்த ரிஷப் பண்ட் கார் விபத்தில் பெரிய காயம் ஏற்பட்டது . ஆகையால் அவரால் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என டெல்லி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.டெல்லி அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரிக்கி பாண்டிங் அவர் கூறுகையில் ரிஷப் பண்ட் எங்களுடன் பௌவிலியனில் இருந்தால் அதுவே எங்களுக்கு பெரிய புதுணர்ச்சியாக இருக்கும் என அவர் கூறினார்.
தற்போது டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரராக இருக்கும் டேவிட் வார்னரை டெல்லி அணியின் கேப்டனாக அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது .டெல்லி அணி ஒரு முறை குட கோப்பையை கைப்பற்றியதில்லை .இந்த முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என தீவிர பயிற்சியில் உள்ளனர் .
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கடந்த வருடம் தான் அறிமுக படுத்தப்பட்டது .இந்த அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் திகழ்கிறரர் .கடந்த வருடம் லக்னோ அணிக்கு சுமாராக இருந்தது .கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் கே.எல் .ராகுல் இருக்கிறார் .
யாருக்கு வெற்றி வாய்ப்பு :
இன்று இரவு 7.30 மணிக்கு ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நடைபெற இருக்கும் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது .இந்த இரு அணிகளுக்கும் சமமான வெற்றி வாய்ப்பு இருக்கும் என சிலர் கூறி வந்தாலும் டெல்லி அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என பெரும்பாலும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி அணி டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பொறுத்திருந்துதான் யார் வெற்றியடைவார்கள் என்று பார்க்க வேண்டும்.




