உலகின் மிகப்பெரிய டி20போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் சமீபத்தில் தான் கோலாகலமாக தொங்கியது. நேற்று முன்தயானால் நடந்த போட்டியின் குஜராத் அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது, ஆனால் அவர்களின் மேட்ச் வின்னர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். இப்படியொரு சூழ்நிலையில் தான் அவரை பற்றிய அதிர்ச்சி தரும் வீடியோ அன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
எப்போதும் போல இல்லாமல் ஐபிஎல் தொடர்களில் பல முன்னணி வீரர்கள் புதிதாக அணிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த பாகையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்த கேன் வில்லியம்சன் சேர்ந்தார். இவர் குஜராத்தை அணிக்கும் மிகவும் முக்கியமான ஒரு வீரராக இருப்பர் என்று நினைத்து எடுத்தார்கள். மூன்றாவது இடத்தில் இறங்கி இக்கட்டான நிலைமைகளில் கூட இன்னிங்ஸைக் கையாள்வதில் பெயர் பெற்றவர் கேன் வில்லியம்சன்.
அப்படிப்பட்ட நிலையில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங் செய்யும்போது 32 வயதான கேனுக்கு காயம் ஏற்பட்டது. ஆட்டத்தின் 13வது ஓவரின் போது, ருதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்சரை காப்பாற்ற முயற்சி செய்யும் போது வில்லியம்சனுக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் நடக்கக்கூட முடியாத நிலையில், மருத்துவர்களின் துண்டையுடன் மைதானத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

வெளியேறிய கேன் :
அதற்கு பிறகு அந்த போட்டியில் வர விளையாடவில்லை. இது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில் தான் குஜராத் அணி ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டு ஐபிஎல் 16 சீசனில் இருந்து முழுவதுமான கேன் வில்லியம்சன் விலகுவதாக தெரிவித்தது. ஏனெற்றால் கிரிக்கெட் வீரருக்கு முழங்கால் காயம் என்பது மிகவும் ஆபத்தான ஓன்று இதனால் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் காயம் குறித்து கவலை கொண்டு அவரை உடனடியாக வீட்டிற்கு திரும்பிவர கட்டளையிட்டது.
Kane Williamson has left the Gujarat Titans camp.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 3, 2023
Feel for him, he’s a champion cricketer!pic.twitter.com/8DTYBjsnig
வெளியேறியதற்கான காரணம் :
அதற்கு காரணம் இந்த ஆண்டு உலகக் கோப்பை இந்தியாவில் நடத்தப்படுகிறது. இப்படி உலகின் மிகப்பெரிய போட்டியில் நியூசிலாந்தின் கேப்டன் பொறுப்பு கேன் வில்லியம்சனின் கைகளில் இருக்கிறது. எனவே கேன் காயம் அடைந்தால் அது அவருக்கும் அணிக்கும் பெரும் அடியாக இருக்கும். எனவே தான் கேன் வில்லியம்சன் ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.





