ஐபிஎல் 2023 க்கான லீக்கில் 47 போட்டி சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் எதிர் கொண்டன. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் அணி 9 இடத்திலும் கொல்கத்தா அணி 8 இடத்திலும் இருந்து வருகிறது. இவ்விரு அணிகளும் கட்டாய வெற்றி பெற கட்டாயத்தில் இருந்து வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன் படி களமிறங்கிய கொல்கத்தா அணியின் வீரர்கள் தடுமாற்றத்தையே சந்தித்து வந்தனர். ஓவரே ஓவரில் குர்பாஸ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆரம்பத்திலே விக்கெட்டை இழந்து வெளியேறினார். ராய் 20 ரன்களில் தியாகி பந்தில் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக விளையாடி வந்த அணியின் கேப்டன் நிதிஷ் ரானா 42 ரன்களில் வெளியேறினார். அதன் பின் வந்த அதிரடி மன்னர் ரஸல் வந்த முதலே தனது பாணியை காட்ட தொடங்கினார். இருப்பினும் ரஸல் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதற்க்கு பின் வந்த சுனில் நரைன் 1 ரன்களில் வெளியேற, ஷர்துல் தக்காரும் 8 ரன்களில் நடராஜனிடம் ஆட்டமிழந்து வெளியேறினார். மற்றொரு பக்கம் நிதானமாக விளையாடி வந்த ரின்கு சிங் அணிக்கு ரன்களை குவித்து வந்த நிலையில் 46 ரன்களில் வெளியேறினார். அதன் பின் வந்த யாரும் ரன்களை அடிக்க திணறி வந்த நிலையில் 20 வது ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது கொல்கத்தா அணி

இலக்கை துரத்திய ஐதராபாத் அணியின் தொடக்கம் மிகவும் மோசமாக இருந்தது. அபிஷேக் சர்மா 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து மயங்க் அகர்வாலும் 18 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். மூன்றாவது இடத்தில் இருந்த ராகுல் திரிபாதி 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் அதிரடியாக ஆட முயற்சி செய்து தனது விக்கெட்டை இழந்தார். மெதுவாக பேட்டிங் செய்த கேப்டன் மார்க்ரம் ஒரு முனையில் விக்கெட்டை இழக்கவில்லை.

ஹாரி புரூக்கும் இதற்கு முந்தய போட்டியிலும் சிறப்பாக செயல்படாத நிலையில் இந்த போட்டியிலும் 4 பந்துகள் ஆடிய நிலையில் அவுட்டானார். கிளாசென் அணிக்காக ஒரு நல்ல இன்னிங்ஸ் விளையாடினார், ஆனால் 20 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் மார்க்ரம் 41 ரன்களில் இன்னிங்சில் ஆட்டமிழந்தார். மார்கோ ஜான்சனும் 1 ரன் எடுத்தார். இருந்த போதிலும் பெரிய ஷாட்டுகளை அடித்து ஆடும் வீரர்கள் இல்லாத நிலையில் கடைசி ஓவரில் பந்துவீசிய சக்கரவர்த்தி சிறப்பான பந்துவீசினால் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தினார்.





