ஐபிஎல் 2023 தொடரின் 21வது லீக் ஆட்டம் தற்போது நடந்தது வருகிறது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் பஞ்சாப் கிங்ஸ்சுடன் எக்கான ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நடந்து வருகிறது. இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முயற்சி செய்தது. அது சரியாக இருந்ததா என்று கேட்டல் கண்டிப்பாக சரியான முடிவு தான். கிட்டத்தட்ட அணைத்து அணிகளுமே டாஸ் வென்றால் முதலில் பந்துவீசத்தான் செல்கின்றனர்.

அந்த வகையில் முதலில் பந்துவீசிய பஞ்சாப் அணியின் வீரர்கள் சரியான பந்துகளை வீச தொடங்கினார்கள். லக்னோ அணியும் அதற்கு தகுந்தாற் போல பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சொல்லப்போனால் பவர் பிளே முழுவதுமே அவர்களின் ஆட்டம் அந்த அளவிற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு பிறகு 7.4 ஓவரில் தான் ஹர்ப்ரீத் பிரார், மேயரிடம் அவுட் ஆனார்.
அதற்கு பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் பொறுமையாக ரன்களை சேர்க்க லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பொறுமையாக இருந்து 56 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரும் பந்துவீச்சாளர் சப்பிடம் ஆட்டமிழந்தார். அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த பூரான் 0 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தனர்.

இந்நிலையில் இதற்கு அடுத்தது களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கத்திலேயே அதிக விக்கெட்டுகள் விழுந்தது. அதுவும் சுலபமான சேசிங்க் கடைசி வரையில் சென்றதற்கு காரணம் பஞ்சாப் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற எண்ணத்தினால் தான். எனவே பொறுமையாக ஆடினார்கள் பஞ்சாப் பேட்ஸ்மேன்ஸ். குறிப்பாக சிக்கந்தர் ராசா பொறுமையாக இருந்து அரை சத்தம் அடித்தார். ஆனால் அவரும் பின்னர் ஆயமிழந்தார் இதனால் பஞ்சாப் அணியின் அழுத்தம் அதிகமாகியது.

பின்னர் பந்த பேட்ஸ்மேக்களும் பொறுமையாக ஆட கடைசி ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 7 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் பஞ்சாப் பந்துவீசும் போதும் இரண்டு அசாத்திய கேட்ச்களை பிடித்த ஷாருக்கான் நல்ல பேட்டிங்கிலும் அசத்தினார். அவர் 10 பந்துகளை 23 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றியடைய வைத்தார். இதன் மூலம் தன்னுடைய 3 வது வெற்றியை பதிவு செய்துள்ளது பஞ்சாப் அணி.





