ஐபிஎல் 2023 தொடரில் இன்று நடந்த 16வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டன. இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பௌலிங் போட முடிவு செய்தது. அது அவர்களுக்கு சரியான முடிவு தான் என்று பிறகு தான் அவர்களுக்கு தெரிந்தது.
Rohit Sharma played Nortje 155+ Kmph ball like a joke !
— 𝐇𝐲𝐝𝐫𝐨𝐠𝐞𝐧 (@Hydrogen_45) April 11, 2023
This man is just beyond any perfection.pic.twitter.com/5aQS0GTj6A
இந்நிலையில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா 10 பந்துகளில் 15 ரன்களை மட்டுமே அடித்து ஹ்ரிதிக் சோக்கினிடம் விக்கெட்டை பறி கொடுத்து மீண்டும் டெல்லி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார். அதற்கு பிறகு வந்தவர்களும் சரியாக ஆடாத நிலையில் டேவிட் வார்னர் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் இணைந்து நல்ல பேட்டிங் செய்து அரை சதம் அடித்தார்கள். முடிவில் டெல்லி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் 173 என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். இருவரும் இணைந்து 36 பந்துகளில் 68 ரன்களை பூர்த்தி செய்தனர். இந்த நிலையில் இஷான் கிஷன் 26 பந்துகளில் 31 ரன்களை அடித்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். கடந்த 26 போட்டிக்கு பின் ,இந்த சீசனில் தான் அரை சதத்தை பதிவு செய்தார் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா.

ரோகித் சர்மாவுடன் இணைந்த அதிரடி ஆட்டக்காரரான திலக் வர்மாவும் இனைந்து டெல்லி அணியின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினர்.திலக் வர்மா 4 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரியை அடித்திருந்த நிலையில் 41 ரன்களில் முகேஷ் குமாரிடம் விக்கெட்டை இழந்தார். அதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ் 0 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.அதன் பின் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 45 பந்துகளில் 65 ரன்களை அடித்த நிலையில் மூஸ்தபிசூர் ரஹிமிடம் விக்கெட்டை இழந்தார்.

இந்நிலையில் கடைசி பிறகு கிரீன் மற்றும் டேவிட் இணைந்து எளிதாக வெல்லக்கூடிய போட்டியை கடைசி வரை கொண்டு சென்று கடைசி ஓவரில் போராடி வென்றனர். இதன் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளதுளனர் மும்பை இந்தியன்ஸ் அணியினர். அதே நேரத்தில் 4 வது தொடர் தோல்வியை சந்தித்துள்ளார் டெல்லி. ஆனால் இதில் கனவிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மும்பை மற்றும் டெல்லி என இரண்டு அணிகளுமே வெற்றிக்காக தடுமாறி கொண்டிருப்பது நமக்கு நாற்றாகவே தெரிகிறது எனலாம்.





