ஐபிஎல் 2023 க்கான 25 லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் எதிர்கொண்டன. இப்போட்டியானது ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் வென்ற சன்ரைசஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதன் படி மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய வந்தனர்.

மும்பை அணிக்காக களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் சீரான இடைவெளியில் சில சிக்சர்களையும் மற்றும் பவுண்டரிகளையும் பறக்க விட்டனர். ரோஹித் ஷர்மா தனது அதிரடியான ஆட்டத்தின் முலம் ஐபிஎல்லில் தனது 6000 ரன்களை கடந்த நிலையிலே நடராஜனிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பிறகும் நிதானமாக விளையாடிய இஷான் கிஷன் 38 ரன்களிலே வெளியேறினார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 7 ரன்களிலே வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். ஒருபுறம் க்ரீன் மட்டுமே பொறுமையாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார்.இந்நிலையில் இவருடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மாவும் அணிக்காக ரன்களை சேர்த்து வந்தனர். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 26 பந்துகளில் 50 ரன்களை பூர்த்தி செய்தனர். திலக் வர்மாவும் நிலைத்து நிற்க முடியமல் 37 ரன்களில் வெளியேறினார்.
Did You Watch – Two stupendous catches by the #SRH Skipper @AidzMarkram ends Ishan Kishan and Suryakumar Yadav's stay out there in the middle.#SRHvMI pic.twitter.com/a1sGNjV6r1
— IndianPremierLeague (@IPL) April 18, 2023
யார் வெளியேறினாலும் நிதனகமாக விளையாடிய க்ரீன் 33 பந்துகளில் தனது அரை சத்தை பூர்த்தி செய்து அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். டிம் டேவிட் மற்றும் க்ரீன் இணைந்து கடைசி ஓவரை வீசிய நடராஜனின் பந்துகளை பறக்கவிட்டு வந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 192 ரன்களை குவித்தனர்.

suryakumar yadav 7(3) hahaha 😭😭😭 pic.twitter.com/8eXbTVDchV
— s ☽ /ily kohli♡ (@iamautumnspark) April 18, 2023
இதனிடையே இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வந்தபோது அவர் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர் ஆனால் அது நடக்காமல் 7 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். அவர் அவுட் ஆனவுடனேயே ரசிகர்களின் கோபம் எல்லையை கடந்து விட்டது. இந்த ஐபிஎல் தொடரில் அந்த பெரிய இன்னிங்கையும் ஆடாத SKY இந்த ஆட்டத்திலும் தோல்வியடைந்ததில் சோசியல் மீடியாவில் ட்ரோல்களுக்கு உள்ளாகி இருக்கிறார்.





