ஐபிஎல் 2023 தொடரின் 64வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே போட்டியானது தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. பஞ்சாப் அணிக்கு இந்த போட்டி பிளே ஆஃப் செல்வதற்கு மிகவும் முக்கியமாது என்ற நிலையில் டெல்லி அணியிடம் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது பஞ்சாப் கிங்ஸ்.

சொல்லப்போனால் இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் பஞ்சாப் தற்போது பிளேஆஃப் சுற்றில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறி விட்டது.இந்தப் போட்டியை பொறுத்தவரையில் முதலில் டாஸ் வென்ற கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச முடிவு செய்திருந்தார். ஆனால் அது சரியான முடிவாக இருக்க வில்லை. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது.
டெல்லி முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கியதும் அணைத்து பேட்ஸ்மேன்களும் மளமளவென ரன் அடித்தனர். டேவிட் வார்னர் விறுவிறுப்பான தொடக்கம் அளித்து பெவிலியன் திரும்பினார். வார்னர் 31 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 38 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்திருந்த பிருத்வி ஷா பெவிலியன் திரும்பினார்.

பின்னர் ரிலே ருஸ்ஸோ, பில் சால்ட் ஆகியோரும் அதிரடியாக பேட்டிங் செய்தனர். ரிலே ரூசோ 37 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே நேரத்தில், சால்ட் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு டெல்லி அணி 213 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்கில் சாம் கரன் மட்டுமே 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார்.

அதற்கு பிறகு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்த களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது. ஷிகர் தவான் ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன்பிறகு பிரப்சிம்ரன் சிங் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அதர்வா டெய்டே மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் இன்னிங்ஸைக் கையாண்டனர். டெய்ட் 42 பந்துகளை எதிர்கொண்டார் மற்றும் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 55 ரன்கள் எடுத்த பிறகு காயம் அடைந்தார்.

அதற்கு லிவிங்ஸ்டன்னை தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் ஜொலிக்காத நிலையில் 15 ரன்கள் விதியசத்தில் தோல்வியை தழுவியது பஞ்சாப். ஆனால் லிவிங்ஸ்டன் சிறப்பாக விளையாடி 48 பந்துகளில் 94 ரன்களை விளாசினார். இருந்த போட்டியிலும் பஞ்சாப் அணி தோல்வியுற்றது. மேலும் பிளே ஆஃப் செல்லவும் வாய்ப்பையும் கிட்டத்தட்ட இழந்து விட்டது.





