ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 66 போட்டியை பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் மோதின. புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் அணி 6 இடத்திலும் பஞ்சாப் அணி 8 இடத்திலும் இருந்து வருகிறது. பஞ்சாப் அணி இந்த வருடம் கிட்ட தட்ட புள்ளி பட்டியலில் இருந்து வெளியேறியது என்று சொல்லாம், ஆனால் ராஜஸ்தான் அணிக்கு புள்ளி பட்டியலில் முன்னேற வாய்ப்பு உள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பௌலிங்கை தேர்வு செய்தார்.

அதன் படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்ப நிலையிலே சொதப்பி வந்தனர். பிரப்சிமரன் சிங் 2 ரன்களிலே ஆட்டமிழந்து வெளியேற அதன் பின் வந்த அதர்வா 19 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அணியின் கேப்டன் ஷிகர் தவான் அணிக்கு நல்ல ஸ்கோரை சேர்ப்பர் என எதிர பார்த்து வந்த நிலையில் 17 ரன்களில் ஆட்டமிழந்து அணியின் ரசிகர்களை ஏமாற்றினார். அதிரடி மன்னர் லிவிங்க்ஸ்டன் தனது பாணியை தொடர்வார் என எதிர் பார்த்த நிலையில் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மற்றொரு புறம் நிதனகமாக விளையாடி வந்த 44 ரன்களில் ஷைனி வீசிய பந்தில் அவுட்டாகி வெளியேறினார். 17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே பஞ்சாப் அணியால் அடிக்க முடிந்தது. அதன் பின் ஜோடி இணைந்த சாம் கரண் மற்றும் ஷாருக்கான் ராஜஸ்தான் அணியின் பௌலிங்கை சிதறடித்து வந்தனர். சாம் கரண் 49 ரன்களிலும் ஷாருக்கான் 41 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருக்க இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது.

188 ரன்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய தொடக்க ஆட்டகரார்கள் பட்லர் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன். பின் வந்த படிக்கல் ஜெயஸ்வாலுடன் இணைத்து பஞ்சாப் அணியின் பௌலிங்கை சிதறடித்தனர். படிக்கல் 51 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங்கிடம் விக்கெட்டை இழந்தார். அதன் பிறகு வந்த கேப்டன் சாம்சன் 2 ரன்களில் வெளியேற ராஜஸ்தான் அணி சற்று பின்னடைவை சந்தித்தது.

நிதானமாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 50 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேற ராஜஸ்தான் அணிக்கு இருந்த வாய்ப்பும் குறைந்து கொண்டே வந்தது.அதன் பின் வந்த ரியான் பாரக் 20 ரன்களில் அவுட்டாக்கி வெளியேறினார். அதிரடியாக விளடியடி வந்த ஹெட்மயர் 46 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார், இறுதியாக 19.4 ஓவர்களில் 6 விக்கேட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.





