இந்தியாவில் மிகவும் பிரபலமான போட்டியான ஐபிஎல் தொடங்கியது சமீபத்தில் கோலாகலமாக தொடங்கியது. இதில் வரும் ஒவொவொரு போட்டியும் ரசிகர்களுக்கு எதாவது அதிர்ச்சியை கொடுத்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 20வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதல் பந்துவீச முடிவு செய்தது. அது சரியான முடிவு தான் என்று பின்னர் தன அவர்களுக்கு தெரிவந்தது. அதே நேரத்தில், இந்த முதல் இன்னிங்ஸில் ஆர்சிபிக்கு சுலபமாக இல்லை. தொடக்கத்தில் நன்றாக இருந்தாலும் ஓவர்கள் போக போக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற அழுத்தம் ஆர்சிபி வீரர்களுக்கு இருந்தது. அதன் போதுதான் ஐந்தாவது ஓவரில் மிட்செல் மார்ஷ் ஃபாஃப் டு பிளெசிஸை அவுட்ஆக்கினார்.
அதற்கு பிறகு மகிப்பலும் சரியான ஆட்டத்தை கொடுக்காத நிலையில் அவர் 18 ரன்களில் 26 ரன்கள் எடுத்து மிட்செல் மார்ஷ் அவர்களிடம் ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு பொறுமையாக ஆடிய வீரர் 34 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஆனால் அதற்கு பிறகே லலித்திடம் ஆட்டமிழந்தார். இருந்தாலும் விராட் கோலி தனது சிறப்பான இன்னிங்ஸை தொடங்கி ஐபிஎல்லில் தனது 47வது அரைசதத்தை அடித்தார்.

இவருக்கு பிறகு களமிறங்கிய மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் தொடர்ந்து சூழல் பந்து வீச்சாளருளிடம் ஆட்டமிழக்க அதற்கு பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்காத நிலையில் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளனர். இன்னிங்சை ஆரம்பித்த போது 200 ரன்களை எட்டும் என எதிர்பார்த்தனர். இருப்பினும் அந்த அணியின் மிடில் ஆர்டர் வலிமையாக இல்லாத காரனத்தால் பெங்களூரு அணி 174 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

இருந்த போதிலும் டெல்லி அணி ஏற்கனவே அதிக போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில் இந்த போட்டியை வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கின்றனர்.மறுபுறம் ஆர்சிபி அணி கடந்த கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ரிங்கு சிங் கடைசி ஓவரில் ரன்களை அடித்து கொல்கத்தாவை வெற்றியடைய வாய்த்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் குறிப்பாக பெங்களூரு அணியின் சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறது பெங்களூரு அணி.





