ஐபிஎல் 2023 க்கான 70வது மற்றும் ப்ளே ஆப்பிற்க்கான கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூருவில் உள்ள சின்ன சாமி மைதானத்தில் மோதின. குஜராத் அணி எற்கனவே தகுதி பெற்று முதலிடத்தில் இருந்தது வருகிறது. பெங்களூரு அணிக்கு இந்த போட்டியில் வென்றால் மட்டுமே புள்ளி பட்டியலில் தகுதி பெரும். இப்போட்டி மழையின் காரணமாக சற்று தாமதமாக போட்டி தொடங்கியது.

டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கோலி மற்றும் டு பிளசிஸ் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். டு பிளசிஸ் 28 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். மேக்ஸ்வெல் 11 ரன்களிலும் லோமரோர் 1 ரன்னில் அவுட் ஆகி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர்.
இருப்பினும் மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த கோலி 35 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அதிரடியாக விளையாடி வந்த ப்ரேஸ்வேல் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அதன் பின் வந்த தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் பெங்களூரு அணி ரன்களை குவிக்க திணறி வந்தனர். இருப்பினும் மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தார் விராட் கோலி.

60 பந்துகளிலே தனது அடுத்தடுத்து சதத்தை பூர்த்தி செய்தார் கிங் கோலி. கோலியுடன் இணைந்த ராவத் ரன்களை குவித்து வந்தார் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்தனர். இந்நிலையில் 198 ரன்கள் இலக்கை துரத்த வந்த குஜராத் அணிக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது. சாஹா 12 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

இருந்த போதிலும் இதனையடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் பொறுமையாக சுப்மன் கில்லிற்க்கு துணையாக ஆடினார். ஒரு கட்டத்தில் திணறினாலும் சுதாரித்துக்கொண்ட சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 39 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். மறுபுறம் அதிரடியாக விஜய் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனாலும் கடைசி வரையில் பொறுமையாக ஆடிய சுப்மன் கில் குஜராத் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். மேலும் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து 52 பந்துகளில் 104 ரன்களை எடுத்தார் சுப்மன் கில். இதன் போது 5 போர்கள் மற்றும் 8 சிக்ஸர்களை விளாசினார். இவரின் அதிரடியான ஆட்டத்தினால் ஆர்சிபி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மேலும்இதனால் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பையும் இழந்தது ஆர்சிபி.





