ஐபிஎல் 2023 சீசனில் இன்று நடக்கும் 9வது லீக் ஆட்டத்தில் சென்னை கொல்கத்தா அணியை ஈடன் கார்டன் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்ள இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி மழை காரணமாக பெரும் தோல்வியை தழுவிய நிலையில் ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது கொல்கத்தா அணி.

கேகேஆர் :
கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் ஏற்கனவே அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதுகில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாட வில்லை. அதோடு அவர் அந்த காயத்திற்கு வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பதினால் முற்றிலுமாக அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து விலகி விட்டார். இவரோடு வங்கதேசத்தின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹாசனும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்டார்.
வீரர்கள் இல்லாமல் கஷ்டப்படும் கேகேஆர் :
மேலும் இவர்களோடு சேர்த்து அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் வங்காள தேசத்தின் வீரர் லிட்டான் தாஸ் விளையாடுவதினால் அவராலும் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இனைய முடியவில்லை. இவையெல்லாம் கண்டிப்பாக கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும், அதிலும் முதல் போட்டியிலேயே தோல்வியை தவிலுய கொல்கத்தா இன்று நடக்கும் போட்டியில் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும் என்று குறிக்கோளுடன் இருந்து வருகிறது.

ஆர்சிபி :
ஆனால் மறுபுறம் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருப்பது டு பிளெசீ தலைமையிலான பெங்களூரு ராயல்ஸ் அணியினர். பெங்களூரு ஏற்கனேவே தன்னுடய முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் வலிமையான அணியுடன் மோதும் அடிபட்ட கொல்கத்தா நைட் ரைட்டர் தங்களுடைய இரண்டாவது போட்டிலிலாவது வெல்வார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பட்டியலை பொறுத்தவரையில் :
ஆட்டங்கள் பொறுத்தவரையில் பார்த்தோம் என்றால் இதுவரையில் ராயல் ஜெலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் 30 முறை மோதி இருக்கிறது. ஆனால் அந்த 30 போட்டிகளில் 16 முறை கொல்கத்தா அணியும், 14 முறை பெங்களூரு அணியும் வெற்றியடைந்திருப்பது குறிப்பிடதக்கது.





