ஐபிஎல் 2023 க்கான 26லீக் போட்டிகளில் அட்டவணையில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள அணிகளான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஜெய்பூரில் உள்ள சாவை மான்சிங் மைதானத்தில் எதிர்கொண்டன. அதில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பௌலிங்கை தேர்வு செய்தார். லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுலும் மேயர்ஸும் பேட்டிங்கில் களமிறங்கினர்.

லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு ஆரம்பம் முதலே ரன்களை அடிக்க கஷ்டப்பட்டு வந்தனர். அதற்க்கு ஏற்றார் போல் ராஜஸ்தான் அணியும் கைக்கு வரும் கேட்ச்களை விட்டு வண்ணமே இருந்தன. அதன் பிறகு ரன்களை அடிக்க வேகம் எடுத்தனர், வேகம் எடுத்த நிலையிலே கே.எல்.ராகுல் 39 ரன்களிலே விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பிறகு வந்த பதோனி மற்றும் ஹூடா சொற்ப ரன்களிலே வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தையே அளித்தனர்.
நன்றாக விளையடி கொண்டு இருந்த மேயர்ஸ் 51 ரன்களை எடுத்துருந்த போது அஷ்வினிடம் விக்கெட்டை இழந்தார்.அதன் பின் களத்தில் இறங்கிய பூரான் 2 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரியை அடித்து அணிக்கு நம்பிக்கை சேர்த்தார்.அவருடன் ஜோடி சேர்ந்து ஸ்டானிஸ் அணிக்கு ஒரு நல்ல ஸ்கோரை சேர்த்தனர். கடைசி ஓவரில் ஸ்டானிஸ் 21 ரன்களை அடித்திருந்த நிலையில் சந்தீப் சர்மாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

சஞ்சு சாம்சன் அடித்த ரன் அவுட்டால் பூரான் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 154 மட்டுமே அடித்தனர். இப்படியொரு நிலையில் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் 103 மீட்டர் தூர அற்புதமான ஒரு பெரிய சிக்ஸரை அடித்தார். இதைப் பார்த்த அவரது மனைவி அதியா ஷெட்டியும் மகிழ்ச்சியில் குதித்தார். ராகுலின் அந்த சிக்ஸர் அடிக்கும் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
𝐑𝐚𝐡𝐮𝐥 𝐠𝐨𝐞𝐬 𝐛𝐢𝐠 – 𝐯𝐞𝐫𝐲 𝐯𝐞𝐫𝐲 𝐛𝐢𝐠! 💥
— JioCinema (@JioCinema) April 19, 2023
Continue streaming #RRvLSG, LIVE & FREE on #JioCinema only!#IPLonJioCinema #TATAIPL | @klrahul pic.twitter.com/CdghB6fza6
இந்நிலையில் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த செய்தியை எழுதும் வரையில் ராஜாதான் ராயல்ஸ் அணியினர் மிகவும் சிறப்பான ஆட்டத்தை ஆடிவருகின்றனர். 6 ஓவர்கள் முடிவில் தொடக்க வீரர்களான பட்லர் 15 பந்துகளில் 19 ரன்களும் மற்றும் ஜோஸ்வால் 17 பந்துகளில் 27 ரன்களையும் எடுத்துள்ளனர்.





