ஐபிஎல் 2023 தொடரின் 52வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அது மிகவும் சரியான தீர்வு என்பது நிரூபித்தது ராஜாஸ்தான் ராயல்ஸ். ஏற்கனவே மும்பைக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் அடித்தும் தோற்றதால் இந்த போட்டியை வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்பில் ராஜஸ்தான் அணி இறங்கியது.

இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய RR அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் தனது மோசமான பார்மை விட்டுவிட்டு ஹைதராபாத் அணிக்கு எதிராக சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி அவுட் ஆனார். ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லரால் இந்த சீசனில் இதுவரை பேட் மூலம் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை. ஆனால் இன்று ஜெய்ப்பூர் மைதானத்தில் அவரது பேட்டிங்கில் அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க முடிந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பிறகு, ஆர்ஆர் அணியின் முதல் ஓவரில் பட்லர் மிகவும் மெதுவாக பேட்டிங் செய்தார். இந்நிலையில் 4வது ஓவரில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். ஆனால் பவர்பிளேக்குப் பிறகு பொறுமையாக விளையாடிய சாம்சன் 38 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் திரும்பினார். அதே நேரத்தில் பிரமாதமாக ஆடிய ஜோஸ் பட்லர் விரைவாக பேட்டிங் செய்து 59 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார்.

ஆனால் இதன் பட்லர் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களையும் அடித்தார். இன்றைய போட்டியில் அவர் 161.02 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்த போது. மேலும் முதல் இன்னிங்கில் ஹைதராபாத் பந்து வீசினால், இந்த அணியில் இருந்து மார்கோ ஜான்சன் மற்றும் புவனேஷ்வர் குமார் 1-1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் 215 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கம் முதலே சிறப்பாக ஆடியது. ஆனால் அம்ரஜித் சிங் ஆட்டமிழக்க பொறுமையாக ஆடிய அபிஷேக் ஷர்மா அரை சதம் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு வந்த கிளாசான் அதிரடியாக ஆடினாலும் 26 ரன்களில் வெளியேற பொறுமையாக ஆடிய ராகுல் திருப்பதி மற்றும் மார்க்ரம் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தார்.
No ball…SRH win well done Phillips and Abdul Samad 🙏🙏 pic.twitter.com/SPrDnnUb9F
— पं. मोहित त्रिपाठी (@mohitmjt01) May 7, 2023
WHAT. A. GAME 😱😱
— IndianPremierLeague (@IPL) May 7, 2023
Abdul Samad wins it for the @SunRisers as he hits a maximum off the final delivery. #SRH win by 4 wickets.
Scorecard – https://t.co/1EMWKvcgh9 #TATAIPL #RRvSRH #IPL2023 pic.twitter.com/yh0WVMEbOz
ஆனால் அதற்கு பிறகு காமிறங்கிய இளேன் பிலிப்ஸ் சிறப்பாக விளையாடி முதல் 3 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு 4 அடித்து போட்டியை மாற்றிய நிலையில் 5வது பந்தில் அவரும் ஆட்டமிழந்தார். இந்நிலையில் கடைசி ஓவரில் சர்மா சரியா பந்துவீசி கடைசி பந்தில் அவுட் ஆனாலும் கடைசி பந்தில் நோபல் விழுந்தது. ராஜஸ்தான் வெற்றி என நினைத்த நிலையில் Free Hit பந்தில் சமத் 6 ஹைதராபாத் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.





