உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டிக்கும் ஐபிஎல் 16 சீசனுக்கான முதல் போட்டி இன்னும் சில மணிநேரங்களில் துவங்க இருக்கிறது. சமீபத்தில் தான் ஐபிஎல் 16 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது அதன் படி இன்று தொடங்கி வரும் மே மாதம் 28ஆம் தேதி ஐபிஎல் 16 முடிவடைகிறது. அதோடு இந்த சீசனில் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி ஐபிஎல் 16 சீசனில் முதல் போட்டி இன்று நரேந்திர மோடி விளையாட்டரங்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன்ஸ் குஜராத் டைட்டன்ஸ் என இரு பெரும் அணிகள் மோத இருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் யார் வெற்றி பெறுவார்கள் என்றும் பிளே ஆஃப் சுற்றுக்கு யார் வருவார்கள் என்றும் உலகின் சிலர் தலைசிறந்த வீரர்களில் ஒருவரும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் அவர்கள் கணித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் :
அவர் கணிதத்தின் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கண்டிப்பாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அதிகம் வாய்ப்பு இருப்பதாக கணித்துளார். ஏனெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான எம்.எஸ்.தோனி, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, பென் ஸ்டாக்ஸ். தீபக் சஹார், என பல தரமான வீரர்கள் இருப்பதினால் இந்த முறை கண்டிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பிளே ஆஃப் சுற்றுக்கு கண்டிப்பாக செல்லும் என்றும் அவர் கணித்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் :
இதனையடுத்து இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ள நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது என்பதை அவர் கணித்துளார். அவரின் கருத்துப்படி இந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், தேவாத்தியா, டேவிட் மில்லர், மேத்யூ வேட் போன்ற அதிரடி சூப்பர் வீரர்கள் இருப்பதினால் இந்த முறையும் கண்டிப்பாக ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஸ்மித் தெரிவித்துள்ளார்.

லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் & SRH :
இந்த அணிகளை தொடர்ந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரான கே.எல்.ராகுல் தலைமையில் ஐபிஎல் களமிறங்கும் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாகவே இருக்கிறது என்பதை தெரிவித்துள்ளார். ஏனென்றால் இந்த அணியில் பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதினால் சில இக்கட்டான நிலைமைகளில் அணியை பாதுகாப்பாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு துணையாக இருப்பார்கள் என்றும் பிளே ஆப்பிற்கு வருவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு பிரகாசமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு நான்காவதாக IPL சீசனில் எப்போதுமே பலமான அணி வீரர்களை கொண்ட அணியான சன் ரைடர்ஸ் ஹைதராபாத் வரும் என்றும் கணித்திருக்கிறார். அவர் கணித்திருப்பது நடக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஸ்மித் :
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான ஸ்மித் சொல்வது கணிப்பாக இருந்தாலும் இவர் ஆஸ்திரேலியா அணியின் சில சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் ஏற்கனவே பல ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பல அணிகளுக்கு விளையாடியுள்ளார். குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு புனே அணிக்கு சிறப்பான கேப்டனாக செயல்பட்டு பைனல் வரை அந்த அணியை கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல் கேப்டனாக இருந்தாலும் அவரது தலைமையில் சில பிரச்சைனைகள் இருந்ததினால் அந்த அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்மித் இந்த வருட ஐபிஎல் தொடரில் எந்த அணியும் இவரை ஏலம் எடுக்கவில்லை. இதனால் இவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று ரசிகர்கள் வருத்தப்பட நிலையில் ஐபிஎல் 16 சீசனில் வர்ணனையாளராக மாறியிருக்கிறார் ஸ்மித். இதனால் ஸ்மித் ரசிகர்கள் கொஞ்சம் ஆறுதலாக இருக்கின்றனர்.





