ஐபிஎல் 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த வருட ஐபிஎல் தொடரை பல வீரர்கள் நம்பவே முடியாத சாதனைகளை செய்தார்கள். குறிப்பாக ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை அடித்து வரலாற்றில் இடம்பிடித்தார். மேலும் 13 பந்தங்களில் அரை சத்தம் அடித்தார் ஜெய்சவால், கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகள் என பல சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்நிலையில் இப்படி கிரிக்கெட் போட்டியில் சாதித்த சில வீரர்கள் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகவும் குக் வித் கோமாளி நிக்கட்சியிலும் பங்கு பெற இறுகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.
இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இதுவரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூன்று சீசன்கள் நடந்து முடிந்திருக்கிறது. தற்போது நான்காவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
View this post on InstagramA post shared by ᴠɪᴊᴀʏ ᴛᴇʟᴇᴠɪsɪᴏɴ ғᴀᴍɪʟʏ ❤️🌟 (@vijaytvgallery)
இந்த சீசனில் தொடக்கத்தில் 10 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வைல்ட் கார்டு இண்டியாக நாகேஷ் அவர்களின் பேரம் கஜேஷ் மற்றும் இயக்குனரும் நடிகருமான கிரண் வந்திருந்தார். கஜேஷ் முதல் வாரத்தில் பல டாஸ்குகளை அசால்ட்டாக செய்த நிலையில் இரண்டாவது வரத்திலேயே எலிமினேட் ஆனார். இருந்த போதிலும் சிவகார்த்திகேயன், சிம்பு என பல சினிமா நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினராக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் தான் தற்போது கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர்களும் தற்போது சிறப்பு விருந்தினரான கலந்த கொள்ள இருக்கின்றனர். ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் தான் வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கின்றனர். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.





