நேற்று நடந்த சென்னை எதிரான ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அதோடு இன்று அவர்களது அணியில் ஜெய்தேவ் உனட்கட்டுக்கு பதிலாக யாஷ் தாக்கூர் அணியில் மாற்றினார். இப்படியொரு நிலையில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை அணி எதிர் அணி துரத்த முடியாத அளவுக்கு ரன்களை குவித்தது

இந்நிலையில் இந்த போட்டியில் 400 ஸ்டிரைக் ரேட்டில் பேட் செய்த கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இந்த போட்டியில் தொவையான நேரத்தில் 2 சிக்ஸர்களை அடித்து கலக்கினார். ஆனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது தான் இந்த மோசமான நிலைமைக்கு காரணம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிதுராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே பிரமாதமாக விளையாடி சென்னை அணிக்கு 110 ரன்களை சேர்த்தனர்.
இவர்களின் பேட்டிங்கின் போது கெய்க்வாட் 57 ரன்களும், கான்வே 47 ரன்களும் எடுத்தனர். இதன்பிறகு, எந்த ஒரு பேட்ஸ்மேனும் பெரிய இன்னிங்ஸை ஆட முடியவில்லை, ஆனால் வெடிக்கும் பேட்டிங் தொடர்ந்தது. இந்தப் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் அம்பதி ராயுடு மூன்றாவது இடத்தில் இருந்தார். அவர் 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கடைசி ஓவரில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

இதன் போது அவர் மூன்று பந்துகள் மட்டுமே விளையாடினார். அவர் இன்னிங்ஸின் முதல் இரண்டு பந்துகளில் தொடர்ச்சியாக புயல் சிக்ஸர்களை அடித்தார். தோனியின் இத்தகைய பேட்டிங்கைப் பார்த்து, பவுலர் மார்க் வுட் அழுவதைக் காண முடிந்தது. அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அதனை தொடர்ந்து 218 எந்த இமய இலக்கைத் துரத்திய லக்னோ நல்ல தொடக்கத்தைப் பெற்றது.

முதல் விக்கெட்டுக்கு கைல் மேயர்ஸ் மற்றும் கேஎல் ராகுல் ஜோடி 79 ரன்கள் சேர்த்தது. இருவரும் ஆட்டமிழந்த பிறகு லக்னோவின் இன்னிங்ஸ் ஆட்டம் காணத் தொடங்கியது. மொயின் அலி தனது சுழலில் லக்னோவின் 4 பெரிய பேட்ஸ்மேன்களை களமிறங்க்கியது. போட்டியின் கடைசி பவர்களின் போது நிக்கோலஸ் பூரன் சிக்ஸர்களை அடித்து ரன்களை குவித்தார். ஆனால் அவை வெற்றிக்கு போதுமானதாக இல்லை.
.@ChennaiIPL emerge victorious in an entertaining run-fest at the MA Chidambaram Stadium 🙌
— IndianPremierLeague (@IPL) April 3, 2023
They bag their first win of the season with a 12-run victory at home 👏👏
Follow the match ▶️ https://t.co/buNrPs0BHn#TATAIPL | #CSKvLSG pic.twitter.com/jQLLBYW61j
இதனால் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. வெற்றிக்கு பின்னர் பேசிய கேப்டன் தோனி, பென் ஸ்டோக்ஸ் மற்றும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வெற்றியின் நாயகன் அலியை மகிழ்ச்சியுடன் கட்டி தழுவினார். இதற்குப் பிறகு, அவர் கேஎல் ராகுலை பற்றி பேட்டியில் கூறினார். தோனியின் இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




