
ஐபிஎல் 2023 க்கான 25 லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் எதிர்கொண்டன. இப்போட்டியானது ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் வென்ற சன்ரைசஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதன் படி மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய வந்தனர்.இந்நிலையில் சாவ்லா எடுத்த விக்கெட் இணையத்தில் பரவி வருகிறது.
#MumbaiIndians are on a rampage.@timdavid8 with two key catches as Klaasen and Mayank Agarwal depart in quick succession.
— IndianPremierLeague (@IPL) April 18, 2023
Live – https://t.co/oWfswiuqls #TATAIPL #SRHvMI #IPL2023 pic.twitter.com/9QSK3QEzcD
மும்பை அணிக்காக களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் சீரான இடைவெளியில் சில சிக்சர்களையும் மற்றும் பவுண்டரிகளையும் பறக்க விட்டனர். ரோஹித் ஷர்மா தனது அதிரடியான ஆட்டத்தின் முலம் ஐபிஎல்லில் தனது 6000 ரன்களை கடந்த நிலையிலே நடராஜனிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பிறகும் நிதானமாக விளையாடிய இஷான் கிஷன் 38 ரன்களிலே வெளியேறினார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 7 ரன்களிலே வெளியேறி ரசிகர்களுக்கு எமற்றையே அளித்தார். ஒருபுறம் க்ரீன் மட்டுமே பொறுமையாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார்.இந்நிலையில் இவருடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மாவும் அணிக்காக ரன்களை சேர்த்து வந்தனர்.

இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 26 பந்துகளில் 50 ரன்களை பூர்த்தி செய்தனர்.. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 192 ரன்களை குவித்தனர். க்ரீன் மட்டுமே 64 ரன்களை அடித்தார்.193 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய சன்ரைசஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரூக் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். சன்ரைசஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்களை எடுக்க கஷ்டப்பட்டு வந்தனர்.
ராகுல் த்ரிப்பாட்டியும் 7 ரன்களிலே வெளியேறினார். சன்ரைசஸ் அணியின் வீரர்கள் மும்பை அணியின் பௌலிங்கை சமாளிக்க கஷ்டப்பட்டு வந்தனர். அதன் பின்னர் வந்த அணியின் கேப்டன் ஒரு சில பவுண்டரிகளை அடித்து அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஆனால் அவராலும் ஜொலிக்க முடியாமல் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அபிஷேக் ஷர்மா 1 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார்.

சன்ரைசஸ் அணிக்கு எந்த பேட்ஸ்மேனும் நிலையாக நின்று விளையாட முடியமால் தவித்தனர். அவரும் அதே ஓவரில் அவுட்டாகி வெளியேறினார்.மயங்க் 48ரன்களிலும், ஜான்சென் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அதன் வந்த வீரர்கள் போராடி வந்த நிலையிலும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 14 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசஸ் அணி தோல்வியை தழுவியது.
ஹென்ரிச் கிளாசெனின்
கிளாசெனின் ஆட்டம் சன்ரைசஸ் அணிக்கு வெற்றியை தேடி தரும் என எதிர் பார்த்த நிலையிலே சாவ்லா ஓவரில் 4,6,6,4 அடித்த நிலையிலே தனது விக்கெட்டை டிம் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.





