ஐபிஎல் 2023 க்கான 67 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின. ப்ளே ஆப்பிற்கு தகுதி பெற சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்து வந்தன. டெல்லி அணி புள்ளி பட்டியல் இருந்து எலிமினட் ஆனது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கையே தேர்வு செய்தார்.அதன் படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கான்வே மற்றும் ருதுராஜ் அணிக்கு அற்புதமான தொடக்கத்தை கொடுத்தனர்.

இவ்விரு வரும் இணைந்து டெல்லி அணியின் பௌலிங்கை சிதறடித்து வந்தனர். 7 ஓவர்கள் முடிவில் 60 ரன்களை குவித்தனர். 37 பந்துகளிலே ருதுராஜ் அவருடைய அரை சத்தத்தை பூர்த்தி செய்தார். குல்தீப் யாதவ் வீசிய ஓவரில் ருத்ர தாண்டவம் ஆடினார் ருதுராஜ்.மற்றொரு புறம் நிதானமாக விளையாடி வந்த கான்வே 33 பந்துகளில் அவருடைய அரை சத்தத்தை பூர்த்தி செய்ய, டெல்லி அணியின் பௌலர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தவித்து வந்தனர்.14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 140 ரன்களை குவித்தனர். 79 ரன்கள் இருந்த நிலையில் ருதுராஜ் விக்கெட்டை இழந்தார்.
அதன் பின் வந்த டுபேவுடன் இணைந்த கான்வே அதிரடியை காட்ட தொடங்கினார். டுபே மற்றும் கான்வே அற்புதமாக விளையாடி டெல்லி அணியின் பௌலிங்கை சிதறடித்தனர்.9 பந்துகளில் 22 ரன்களை அடித்து வெளியேற, தல தோனி களமிறங்கினார். இந்நிலையில் கான்வே 87 ரன்களில் வெளியேறினார்.அதன் பின் வந்த ஜடேஜா 7 பந்துகளிலே 20 ரன்களை அடித்கார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை குவித்தது சென்னை அணி.

224 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே சொதப்பி வந்தது. ப்ரித்வி ஷா 5 ரன்களிலும் அதன் பின் வந்த சால்ட் 3 ரன்களில் வெளியேற ரூசோ ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வந்தது. சென்னை அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியமால் திணறி வர யாஷ் தூள் 13 ரன்களில் வெளியேறினார். வரிசையாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியே வந்தனர்.

14 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை மட்டுமே அடித்திருந்தது. மற்றொரு புறம் தனி ஆளாக போராடி வந்தார் அணியின் கேப்டன் வார்னர். அமன் 7 ரன்களில் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். தனியாக போராடி வந்த வார்னர் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். லலித் யாதவ் 6 ரன்களிலும் வெளியேற, குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்களில் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆகையால் சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது அணியாக தகுதி பெற்றது.





