இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 36வது ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பௌலிங் செய்ய முடிவு செய்தார். கொல்கத்தா அணி தொடர் தோல்வியில் இருந்து மீளவும் புள்ளி பட்டியலில் முன்னேறவும் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

அதன் படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க அட்டகாரர்கள் ஜெகதிசன் மற்றும் ராய் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தையே குடுத்தனர். 6 வது ஓவரை வீசிய ஷபாஸ் அஹமத் ஓவரில் ஒரே ஓவரில் 25 ரன்களை விட்டு கொடுத்தார். ராய் 22 பந்துகளில் அவருடைய அரை சதத்தை அடைந்தார், 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்களை குவித்துவந்தனர். இந்நிலையில் 27 ரன்களில் ஜெகதிசன் அவுட்டாகி வெளியேற, அதன் பின்னரே ராய் 56 ரன்களில் வெளியேறினார். அதன் பின்னரே அணியின் ஸ்கோர் மட மடவென குறைய தொடங்கியது.

பெங்களூரு அணியின் பௌலர்கள் அதன் பின் சிறப்பாகவே செயல்பட்டு கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்களை திணற வைத்து வந்தனர். அதன் பின் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் கேப்டன் ரானா நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தி வந்தனர். இருவர்களும் இணைந்து 36 பந்துகளில் 50 ரன்களை பூர்த்தி செய்தனர். அணியின் கேப்டன் ரானா அதன் பிறகு அதிரடியை காட்டத்தொடங்கினார். அதன் பின் வந்த வீரர்கள் அனைவரும் நன்றாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது கொல்கத்தா அணி.
201 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கோலி மற்றும் டு ப்ளசிஸ் முதலில் அதிரடியான ஆட்டத்தை ஆரம்பித்தனர், ஆனால் டு ப்ளசிஸ் 17 ரன்களில் வெளியேற, அதன் பின்னர் வந்த ஷாபாஸ் 2 ரன்களில் வெளியேறினார். இந்நிலையில் களம் கண்ட மேக்ஸ்வெல் நிலைத்து நிற்க முடியாமல் வருண் சக்ரவர்த்தியின் சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்தார். பெங்களூரு அணி தொடர்ந்து தடுமாற்றத்தையே சந்தித்து வந்தது. லோம்ரர் 33 ரன்களில் வெளியேற, அணியின் கேப்டன் கோலி நிதானமாகவே விளையாடி அணியின் வெற்றிக்கு போராடி வந்தார். தனது அரை சதத்தை பூர்த்தி செய்த நிலையில் ரசலிடன் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன் பெங்களூரு அணிக்கு இருந்த வாய்ப்பும் நழுவியது. அதன் பின் வந்த வீரர்களால் கொல்கத்தா அணியின் பௌலிங்கை விளையாட திணறி வந்தனர். தினேஷ் கார்திக் இறுதி வரை நின்று வெற்றி பெற வைப்பார் என எதிர்பார்த்த நிலையில் வருணின் சுழல் பந்தில் 22 ரன்களில் வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் ரன்களை 179 மட்டுமே எடுக்க முடிந்தது. 21ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அற்புதமான வெற்றி பெற்றது.





