ஐபிஎல் 2023 க்கான 69வது லீக்கில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. மும்பை அணி ப்ளே ஆப்பிற்க்கு தகுதி பெற இப்போட்டியில் வெற்றி பெற கட்டாயத்தில் இருந்து வருகிறது. சன்ரைசர்ஸ் அணி புள்ளி பட்டியலில் ப்ளே ஆப் ரேசில் இருந்து வெளியேறி விட்டது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார்.

அதன் படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் விக்ராந்த் ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடி வந்தனர். அதன் பிறகு அதிரடி காட்ட தொடங்கினார். மும்பை அணி பௌலிங்கை அனைத்து பக்கங்களிலும் சிதறடித்து வந்தனர். விவ்ராந்த் அதிரடியாக விளையாடி தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார். 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்களை குவித்து வந்தனர். மும்பை அணியின் பௌலர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தனர்.
மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் அவரும் அவருடைய அரை சதத்தை பூர்த்தி செய்ய மும்பை அணி தடுமாறி வந்தது. அதிரடியாக விளையாடி வந்த விவ்ராந்த் 69 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மயங்க் அகர்வால் அதிரடியாக விளையாடி வந்த நிலையில் 83 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் பிலிப்ஸ் அவர் 1 ரன்னிலே வெளியேற ஹைதராபாத் அணி சற்று தடுமாறி வந்தது. கிளாசென் 18 ரன்களிலும் மற்றும் ப்ரூக் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகி வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 200 ரன்களை குவித்தது ஹைதராபாத் அணி.

201 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்தனர். இருப்பினும் இஷான் கிஷன் 14 ரன்களிலே வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார்.அற்புதமாக விளையாடி வந்த க்ரீன் 20 பந்துகளிலே அவருடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார்.ரோஹித் சர்மா மற்றும் க்ரீன் அற்புதமான கூட்டணி அமைத்து ஹைதராபாத் அணியின் பௌலிங்கை சிதற விட்டு 51 பந்துகளில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன் பின்னர் கேப்டன் ரோஹித் சர்மா 31 பந்துகளில் 50 ரன்களை பூர்த்தி செய்தார்.

13 ஓவர்கள் முடிந்த நிலையில் 1 விக்கெட்டை இழந்த நிலையில் 148 ரன்களை குவித்து வெற்றிக்கு அருகில் சென்றது. ரோஹித் சர்மா 56 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ் க்ரீன் இணைந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். க்ரீன் அற்புதமான ஆட்டத்தால் 100 பூர்த்தி செய்த நிலையில் 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 201 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது





