
ஐபிஎல் 2023 க்கான 32 லீக் போட்டியில் பெங்களூரு உள்ள சின்ன சாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொண்டன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு தொடக்க அட்டகரர்கள் கேப்டன் கோலி மற்றும் டுப்ளசிஸ் களமிறங்க ஆரம்பமே அவர்களுக்கு சோகத்தை கொடுத்தது. போல்ட் வீசிய முதல் பந்திலே கேப்டன் கோலி வெளியேற, அதன் வந்த ஹாபாஸ் ராஜஸ்தான் அணியின் பந்து வீசை சமாளிக்க முடியாமல் அவரும் போல்ட்டிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

டுபிளசிஸ் மட்டுமே அணிக்கு நம்பிக்கையாக இருந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் ஜோடி இணைந்த மேக்ஸ்வெல் அதிரடியாக சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளை விளாசி ரன்களை சேர்த்தனர். 27 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். என்ன தான் ஆரம்பத்தில் சொதப்பி இருந்தாலும் அதன் வந்த வீரர்கள் அதை சரி செய்து விட்டனர். 55 பந்துகளில் இருவரும் ஜோடி சேர்ந்து சதத்தை நிறைவு செய்தனர். டுப்ளசிஸூம் 32 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்து அணிக்கு பக்க பலமாக இருந்தார். ராஜஸ்தான் அணி பந்து வீச தடுமாறி கொண்டு இருந்த நிலையில் ரன்அவுட் ஆகி வெளியேறினார் டுப்ளசிஸ்.
மேக்ஸ்வெல் நிதானமாகவும் தேவையான நேரங்களில் பவுண்டரிகளை அடித்தும் 14வது ஓவரில் அணியின் ஸ்கோர் 150 ரன்களை கடந்தது பெங்களூரு அணி. ஆனாலும் அவராலும் 20 வது ஓவர் வரை விளையாட முடியாமல் 77 ரன்களில் அஷ்வினிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த அனைத்து பேட்ஸ்மேன்களும் ராஜஸ்தான் அணியின் பௌலிங்கை சமாளிக்க திணறி வந்தனர். வந்த வீரர்கள் பெரும்பாலும் ரன் அவுட்டகியே வெளியேறினார்கள். ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி கடைசியில் தடுமாற்றத்தையே சந்தித்து வந்தனர். 9 விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 189 ரன்களை அடித்தனர்.

190 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே சொதப்பி வந்தது. ரன்களை ஏதும் எடுக்காமல் பட்லர் விக்கெட்டை சிரஜிடம் பறிகொடுத்து வெளியேறினார். ஜெய்ஸ்வால் மற்றும் படிக்கல் ஜோடி இணைந்து நிதானமாக நின்று ரன்களை சேர்த்தனர். பின் நிலைத்து நிற்க முடியாமல் படிக்கல் அரை சதத்தை பூர்த்தி செய்த நிலயில் விக்கெட்டை இழந்து வெளியேற ராஜஸ்தான் அணிக்கு இருந்த வாய்ப்பும் வெளியேறியது. அவரை தொடர்ந்து ஜெய்ஸ்வாலும் 47ரன்களில் வெளியேறினார். இதனை தொடர்ந்து பெங்களூரு அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது.

இவர்களுக்கு பின் வந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அணிக்கு வெற்றியை தேடி தருவர் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றத்தையே அளித்து வெளியேறினார். ஜூரேல் ஒரு சில பவுண்டரிகளை விளாசி இறுதியில் அணிக்கு நம்பிக்கையை சேர்த்தார், அவருடன் இணைந்து அஷ்வினும் பவுண்டரிகளை பறக்க விட்டார். கடைசி ஓவர் வரை முயற்சித்து ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இருப்பினும் கடைசி ஒரு பந்தில் 9 ரன்னை எடுக்க வேண்டிய நிலையில் அதை எடுக்க முடியாமல் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.





