ஐபிஎல் 2023 திருவிழா :
அனைத்து இந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்த , ஐபிஎல் 2023 திருவிழா நேற்று இரவு அகமதாபத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.தொடக்க விழாவை சிறப்பிக்கும் வகையில் நடிகைகள் ரஷ்மிகா மந்தனா மற்றும் தமனா ஆகியோர் பங்கேற்று நடனம் ஆடியும் , பாடகர் அர்ஜித் சிங் பாடல்களை பாடியும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

நேற்றைய போட்டிகள் :
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் இன்று மோதின அதில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்தது பிறகு பேட்டிங்ஆடிய கொல்கத்தா அணி 16 வது ஓவர் பேட்டிங் ஆடிய போது மழை குறிக்கிட்டது. அதன்பின் DLS முறை படி பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியை லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிகளும் மோதின .அந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நடைபெற்றது . அதில் டெல்லி அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது .முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை எடுத்தது பிறகு.அதன்பின் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியடைந்தது .

இன்றைய போட்டிகள் :
இன்று முதல் போட்டியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத்
அணியும் மோத உள்ளன .இந்த போட்டியானது இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற உள்ளது. மற்றொரு போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன. அந்த போட்டியானது பெங்களூரில் உள்ள எம் .சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் :
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் உள்ளார். இந்த வருடம் வரபோகின்ற உலக கோப்பையில் இடம் பெற வேண்டும் என ரசிகர்கள் வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள். ராஜஸ்தான் அணியில் முக்கிய மூன்று வீரர்கள் இல்லாமல் இந்த அணி விளையாடுகிறது. ராஜஸ்தான் அணியானது ஐபிஎல் முதல் சீசனில் மட்டும் கோப்பையை வென்றது .அதன் பிறகு கடந்த வருடம் தான் இறுதி போட்டிக்கு சென்றது. ஆனாலும் கோப்பையை குஜராத் அணியிடம் பறிகொடுத்து. இந்த வருடம் வென்று முடிக்க வேண்டும் என முனைப்ப்பில் உள்ளது.
சன்ரைசஸ் ஹைதராபாத் :
கடந்த வருடம் 8 வது இடத்திற்கு தள்ளப்பட்டது .பிறகு அணியில் பல மற்றகளை செய்தும் சில வீரர்களை வெளியே அனுப்பியது . இந்த வருடம் கேப்டனாக இருக்கும் எய்டம் மார்க்கம் தென்னாப்பிரிக்க மற்றும் நெர்லாந்து அணிகள் மோதும் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெற்றுள்ளார் .அதன் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் கேப்டனாக இருப்பார் என ஹைதராபாத் அணி நிர்வாகம் கூறியுள்ளது.

வெற்றி கணிப்பு :
ராஜஸ்தான் அணியில் ஜோ ரூட் ,ஜேசன் ஹோல்டர் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு மேலும் பலம் சேர்க்கின்றது . ஹைதராபாத் அணியில் மயன்க் அகர்வால் ,ராகுல் டிர்பதி ஆகியோர் உள்ளனர் .இருப்பினும் ராஜஸ்தான் அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் கூறிவருகின்றனர் .





