ஐபிஎல் 2023 க்கான லீக் 45 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் மோதின. சென்னை அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் தீபக் சாஹார் சென்னை அணியில் இணைந்தார். லக்னோ அணியின் கேப்டன் ராகுல் இந்த போட்டியில்இருந்து விலகியதால் க்ருனால் பாண்டியா கேப்டனாக செயல் பட்டு வந்தார். மழையின் காரணமாக சற்று தாமதமாக தொடங்கியது.

டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதன் படி களம் கண்ட தொடக்க வீரர்களான மேயர்ஸ் மற்றும் வோஹ்ரா ஆரம்பம் முதலே நிதனமான தொடக்கத்தையே கொடுத்தனர். மொயின் அலி வீசிய ஓவரில் மேயர்ஸ் 14 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதற்கு பிறகு வந்த லக்னோ அணியின் வீரர்கள் வந்த வேகத்திலே சென்றனர். தீக்ஷனா வீசிய ஓவரில் வோஹ்ரா 10 ரன்களிலும் மற்றும் க்ருனால் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினார்கள்.
ஜடேஜா வீசிய பந்தில் ஸ்டானிஸ் 6 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். 9 ஓவர் முடிந்து இருந்த நிலையில் 42 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. லக்னோ அணி வீரர்கள் அதிரடியை காட்ட நினைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தனர். கரண் ஷர்மா மொயின் அலியிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அதன் பின் பூரான் மற்றும் பதோனி அருமையான பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்களை பூர்த்தி செய்தனர்.

பூரானும் வெளியேறிய அதன் பின் பதோனி சிறப்பான ஷாட்களை அடித்து அணிக்கு ஸ்கோர்களை சேர்த்து வந்தார். மழையின் காரணமாக 19.2 ஓவர்களில் போட்டியை நிறுத்தினார்கள் நடுவர்கள். அந்த நிலையில் லக்னோ அணி 125 என்ற ரன்களில் இருந்தன.இருப்பினும் மழையானது பொழிந்த வண்ணமே இருந்ததனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு ஒரு புள்ளிகள் பிரித்து வழங்கப்பட்டது. இது சென்னை அணி ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை அணி இப்போட்டியை வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் இருந்து வந்தன.





