ஐபிஎல் 2023 இல் இன்று மிகவும் அற்புதமான போட்டி நடக்கிறது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், சென்னை சூப்பர் மற்றும் டெல்லி அணிகள் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன் படி சென்னை அணியின் வீரர்கள் சற்று நிதானமாக விளையாடி ரன்களை குவித்து வந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதிக பட்சமாக டுபே 25 ரன்களையும்,ருதுராஜ் 24 ரன்களையும், ராய்டு 23 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

டெல்லி அணியின் பேட்டிங் மோசமனதாகவே இருந்து வந்தது, 20 ஓவர்கள் முடிவில் 140 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.அணியின் அதிக பட்சமாக ரூஸோ 35 ரன்களை மட்டுமே எடுத்தார், அதன் பின் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆகையால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்கு மூன் டாஸ் வென்ற பிறகு தோனி செய்த வேடிக்கையான செயல் இணையத்தில் பரவி வருகிறது.

டாஸ் வென்று டிரெஸ்ஸிங் ரூமை நோக்கி தோனி நடந்து சென்றபோது, அதிர்ச்சியும் சம்பவமும் நடந்தது, தோனி தனது அணியின் வீரரான தீபக் சஹரை அறைவது போன்ற வீடியோ இணையத்தில் பரவி வந்தன. அது என்னவென்றால் தோனி விளையாட்டு தன்மையாக அவரை அடிப்பது போல் சென்று அடிக்காமல் வந்துவிட்டார்.
Dhoni ne thappad wala pic.twitter.com/jDWnFAfmTp
— Cricket (@Crictadium) May 10, 2023
இதே போல் ஒரு போட்டியில் தோனி பேட்டிங் பயிற்சியின் போது தீபக் சாஹரின் முகத்தில் அறைவது போல் பேட்டை கொண்டு சென்றார். அதை பார்த்த தீபக் சஹர் தல தெறிக்க ஓடிய வீடியோவும் இணையத்தில் பரவி வந்தன. இதனை பார்த்த நெட்டிசன்கள் குறும்பு காரர் தோனி என்றும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.





