ஐபிஎல் 2023 க்கான 27லீக் போட்டிகளில் பஞ்சாப் கிங்க்ஸ் அணியும் ,ராயல் சேலஞ்ஜர் அணியும் பஞ்சாப் மொஹாலியில் உள்ள மைதானத்தில் எதிர்கொண்டன. அதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் பௌலிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார், முதலில் களமிறங்கிய விராட் கோலி மற்றும் டுபிளஸிஸ் இணைந்து அதிரடியாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தையே குடுத்தனர். இருவரும் ஜோடி சேர்ந்து பஞ்சாப் அணியின் பௌலிங்கை அனைத்து பக்ககளிலும் அடித்து விளையாடி வந்தனர். டு பிளஸிஸ் 30 பந்துகளிலே அரை சதத்தை பூர்த்தி செய்து அதிரடியாகவே விளையாடி வந்தார். இருவரும் இணைந்து 11.4 ஓவர்களில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிபை பூர்த்தி செய்தனர். அதன் பிறகு பெங்களூருக்கு அணிக்கு ஸ்கோர் வேகமாகவே வந்தது, விராட் கோலியும் அவரது அரை சத்ததை நிறைவு செய்தார்.

மீண்டும் மீண்டும் அடிக்க முயற்ச்சி செய்த நிலையில் 59 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார் விராட் கோலி. இவருக்கு பிறகு வந்த மேக்ஸ்வெல் 0 ரன்களில் வெளியேறி ஏமாற்றத்தையே அளித்தார். அதன் பின் டுப்ளஸிஸ் 84 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். பஞ்சாப் அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் திணறி வந்தனர் பெங்களூரு பேட்ஸ்மேன்கள். தினேஷ் கார்த்திக்கும் 7 ரன்களில் வெளியேற அணியின் ஸ்கோர் 174 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

175 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டைடி மற்றும் ப்ரப்சிம்ரன், டைடி சிராஜ் வீசிய முதல் பந்திலே பவுண்டரியை அடித்த நிலையிலே அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். அதன் பின் வந்த ஷார்ட் மற்றும் லிவிங்க்ஸ்டன் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 27 ரன்களில் 3 விக்கெட்டை இழந்து தடுமாறி வந்தது பஞ்சாப் அணி. பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் பெங்களூரு அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வரிசையாக விக்கெட்டை இழந்து வெளியேறினர்கள். ஒரு முனையில் பாட்டிய மற்றும் பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் காரணம் சொற்ப ரன்களிலே வெளியேறினார்கள்.

மறுமுனையில் நன்றாக விளையாடி கொண்டிருந்த ப்ரப்சிம்ரன் சிங் 46 ரன்களில் ஹர்ஷல் பட்டேலிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி போட்டியில் பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடி தந்த ஷாருக் கானும் ஹசரங்காவிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். ஜிதேஷ் ஷர்மா அணிக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுதிய நிலையில் அவரும் அவுட்டாகி வெளியேற பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பஞ்சாப் அணி, விராட் கோலி கேப்டனாக நின்று அணியை வெற்றி பெற செய்தார்.





